“சர்வதேச குரான் எரிப்பு தினம்-அமெரிக்க சர்ச்

Posted: ஓகஸ்ட் 3, 2010 in Uncategorized

நியூயார்க்,

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினமான வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, “சர்வதேச குரான் எரிப்பு தினம்”  ஆக கடைபிடிக்கப் போவதாக அமெரிக்காவின் புளோரிடா மாகாண  கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அறிவித்துள்ளது.
இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக இதனை கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ள அந்த தேவாலயம், இஸ்லாம் ஒரு போலியான மற்றும் சாத்தான் மதம் என்றும் கூறியுள்ளது. மேலும் Pastor Hosting ‘International Burn A Quran Day’: ‘We Have Nothing Against Muslims’செப்டம்பர் 11 ஆம் தேதியன்று காலை 6 மணி முதால் 9 மணி வரை குரானை எரிக்குமாறு இணைய தளங்கள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் மூலமும் கிறிஸ்தவர்களுக்கு அந்த தேவாலயம் அழைப்பு விடுத்துள்ளது.
“இஸ்லாம் மதம் ஒரு சாத்தான் மதம் என்று நாங்கள் கருதுகிறோம். லட்சக்கணக்கான மக்கள் நரகத்திற்கு போக காரணமாக இருந்தது அந்த மதம். அது ஒரு போலியான மதம். அது ஒரு வன்முறை மதம் என்பது பலமுறை மீண்டும் மீண்டும்
நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அந்த தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தேவாலயத்தின் பேஸ்புக்கிலும், குரானுக்கான நிரந்தர இடம் நெருப்புதான் என்றும், எனவேதான்
அதனை அதற்குரிய இடத்தில் (தீ) வைக்க விரும்புகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் யூ டியூப் மூலமும் இதே பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது அந்த தேவாலயம். “உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே சந்தோசமாக
இருக்கும் முஸ்லிமை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் மெக்கா செல்கிறார்கள். அங்குள்ள மசூதியில் ஒன்றுகூடி நிற்கிறார்கள்.
அவர்கள் அங்கு நிற்பதை பார்க்கும்போது அது ஒரு உண்மையான மத சந்தோசமாக தெரிகிறதா? எனக்கென்னவோ அது ஒரு சாத்தானின் மதமாகத்தான் தெரிகிறது” என்று அதில் கூறியுள்ளார் மேற்கூறிய தேவாலயத்தின் பாஸ்டர் ஜோன்ஸ்.
இதனிடையே புளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள “த நேசனல் அசோசியேசன்
ஆப் எவான்ஜெலிக்கல்ஸ்” என்ற கிறிஸ்தவ அமைப்பு, குரான் எரிப்பு நிகழ்ச்சியை புளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும், இது உலக அளவில் இரு பிரிவு மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளது.

பின்னூட்டங்கள்
  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    நல்ல விசயம் தான்.

    – ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com/

  2. yuinmai சொல்கிறார்:

    plz vist “”QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL” on youtube

  3. maanick சொல்கிறார்:

    kuranai americavil matum yeripathu thavaru ulagam muzhum yerika vendum.ellorukum vizipunarvu vara vendum

ஜெகதீஸ்வரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி