நெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி

Posted: ஜூலை 8, 2015 in Uncategorized

நீதிமன்றத்தில் பேராயர் கதறல்..

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி நீதிபதியின் முன்பு திருநெல்வேலி CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல்.

பேராயர் தேர்தல் செல்லுமா என்ற வழக்கின் ஒரு மேல் முறையீட்டு வழக்கில் பணியாளர்களை நியமனம் செய்யவும் மாறுதல்கள் மேற்கொள்ளவும் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக தன்னிஷ்டம் போல் நியமனம் செய்தும், மாறுதல்கள் செய்தும் வந்துள்ளார்.

எனவே பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுதாரரான திரு அசோக் என்பார் தொடுத்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேற்று கண்டிப்பாக ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததைத் தொடர்ந்து, 7.7.15 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்பொழுது மாண்புமிகு நீதியரசர் சிவகுமார் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என எச்சரித்தார்.

மனம் கலங்கிய கிறிஸ்துதாஸ் நீதிபதியின் முன்பு கைகளைக் கூப்பியவாறு மன்னித்துவிடுங்கள் எனக் கதறினார்.

அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதியரசர் அவர்கள் எழுத்துபூர்வ மன்னிப்பு கோரி அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் திருமதி லிட்டா சீனிவாசன் அவர்கள், பேராயர் கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த பிறகும் பல நியமனங்களைச் செய்திருக்கிறார் எனத் தெரிவித்ததும் அதுபற்றிய ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதனிடையே பேராயர் கிறிஸ்துதாஸ் பதவி விலக வலியுறுத்தி CSI கிறிஸ்தவர்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

‪#‎அங்கியில்‬ ஒரு அந்திக்கிறிஸ்து..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s