ஒக்ரோபர் 15, 2010 க்கான தொகுப்பு

Principal Rajarathinam with Former President Kalamதிருச்சி: திருச்சி யில் உள்ள மிகவும் பிரபலமான புனித ஜோசப்ஸ் (தூய வளனார்) கல்லூரி முதல்வரான பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி என்பவர் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில், மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன்.

திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் அவ்வப்போது, திருச்சி கலைக் காவேரி கல்லூரிக்கு வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. 22.01.2006 அன்று கல்லூரிக்கு என்னை அழைத்தார். அப்போது குளிர்பானம் கொடுத்தார். அதில் நான் மயக்கம் அடைந்தேன். அப்போது என்னை அவர் கற்பழித்தார். இதை செல்போனில் படம் பிடித்துக் காட்டி, பலமுறை என்னிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்ப்பமானேன். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார். திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். மதுரை மாநில சேசு சபை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊழியர்கள் சேவியர், சேவியர் வேதம் இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை [^] எடுக்கவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.

புகாரை ஏற்ற போலீசார், மேரியை மருத்துவப் பரிசோதனை [^] செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சியின் மிகவும் பழமையான, பிரபலமான கல்லூரி தூய வளனார் கல்லூரி. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படித்த கல்லூரி இது. இக்கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது


மூதாட்டியை
மதமாற்றம் செய்து ரூ. 2 கோடி சொத்து சுருட்டல்[1]:

, மூதாட்டியை மதமாற்றம் செய்து, இரண்டு கோடி ரூபாய் சொத்துக்களை கிறிஸ்தவ மதபோதகர், தன் பெயரில் எழுதி வாங்கினார். ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர், ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த முனுசாமியின் மனைவி லட்சுமியம்மா (85). இவருக்கு குழந்தை இல்லாததால், அண்ணன் மகள் சரஸ்வதியை (45) சிறு வயதில் தத்தெடுத்து வளர்த்தார். சரஸ்வதிக்கு திருமணமாகி, நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

விதவையை கிருத்துவ மதமாற்றல்[2]: லட்சுமியம்மாவை, சரஸ்வதி குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். லட்சுமியம்மாவுக்கு சாந்திநகரில் எட்டு சென்ட் நிலம், 16 வீடுகள் மற்றும் ஒரு காலிமனை, நகை, வங்கி சேமிப்பு, தபால் அலுவலக சேமிப்பு என, இரண்டு கோடி ரூபாய் சொத்து உள்ளது. கடந்த இரு ஆண்டாக சரஸ்வதி குடும்பத்தினர், லட்சுமியம்மாவிடம் சொத்துகளை எழுதி தருமாறு வற்புறுத்தியும், அவர் மறுத்தார். இதனால், சரஸ்வதி மற்றும் அவரது மகன் அரீஷ் மற்றும் மகள் பாக்கியலட்சுமி ஆகியோர், லட்சுமியம்மாவை கொடுமைப்படுத்தினர். இரு வாரத்துக்கு முன் மத்திகிரி கூட்டுரோட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்பிற்கு சொந்தமான “ஆனந்த் ஆசிரமம்”[3] சென்ற லட்சுமியம்மா, உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். ஆசிரம தலைவர் பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை[4], லட்சுமியம்மாவை மூளை சலவை செய்து, கிறிஸ்தவ அமைப்புக்கு மதமாற்றம் செய்தார்[5].

கிருத்துவ பாஸ்டரின் கள்ளத்தனம்: பாஸ்டரின் ஆதரவால் ஈர்க்கப்பட்ட லட்சுமியம்மா, தன்னுடைய சொத்துகளை ஆசிரமத்திற்கு எழுதி கொடுத்தார். பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை சொத்துகளை ஆசிரமம் பெயரில் எழுதி வாங்காமல், லட்சுமியம்மாவை ஏமாற்றி தன்னுடைய பெயருக்கு விற்பனை செய்ததாக எழுதி வாங்கினார்[6]. இதற்கிடையில், லட்சுமியம்மா ஆசிரமத்தில் இருப்பதை அறிந்த வளர்ப்பு மகள் சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர், அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவரிடம் மீண்டும் சொத்தை எழுதி தருமாறு கேட்டதற்கு, சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விட்டதாக கூறினார்[7].

ஏமாற்று வேலை செய்த எத்தன் பாஸ்டர்: ஆத்திரமடைந்த சரஸ்வதி குடும்பத்தினர், அவரை தாக்கினர். காயமடைந்த லட்சுமியம்மா, இரவு வீட்டில் இருந்து தப்பி, மத்திகிரி ஆசிரமத்துக்கு சென்றார்.
சரஸ்வதி குடும்பத்தினர், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில பொருளாளர் நரேந்திரன், இந்து முன்னணி நகர தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில், 60க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, ஆசிரமத்தை முற்றுகையிட்டனர். ஆசிரம நிர்வாகிகளிடம் எழுதி கொடுத்த பத்திரங்களை வாங்கி பார்த்த போது, பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை, மூதாட்டியை ஏமாற்றி சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வாங்கியது தெரிந்தது. ஆவேசமடைந்த இந்து அமைப்பினர், ஆசிரம நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்த மத்திகிரி போலீசார் அங்கு வந்து, இந்து அமைப்பினரை சமாதானம் செய்து, பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை மற்றும் ஆசிரம நிர்வாகிகளை டவுன் ஸ்டேஷனுக்கு வரவழைத்து,  பேச்சு வார்த்தை நடத்தினர். ஆசிரம நிர்வாகி எழுதி வாங்கிய சொத்துகளை, மீண்டும் லட்சுமியம்மா பெயருக்கு எழுதி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

கட்டாய மதமாற்றத்தை கண்டித்து இந்து அமைப்புகள் அரை நாள்பந்த்[8]: ஓசூரில் இப்படி தொடர்ந்து மோசடி மதம் மற்றம் நடந்து வருவதனால், நான்கு மாதங்களுக்கு முன்னர் ஓசூரில் இந்து அமைப்புகள் பந்த நடத்தினர். ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், “பந்த்’ போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், “இயேசு விடுவிக்கிறார்’ என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்.

ஓசூர் கிருத்துவ அமைப்புகளுக்கு புகலிடமாக உள்ளது[9]: ஓசூர் ஹேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல், பெருவிழா ஜெப கூட்டம் நடக்கிறது. ஓசூர் டவுன், மத்திகிரி, பாகலூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. மத பிரசாரம் என்ற பெயரால், இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக, இந்து அமைப்புகள் சார்பில் புகார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், மத பிரசாரம் மற்றும் மத மாற்றத்தைக் கண்டித்து, ஓசூரில் நேற்று, அரை நாள், “பந்த்’க்கு அழைப்பு விடுத்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு, பஜ்ரங்தள் நகர தலைவர் விஷ்ணுகுமார் தலைமையில் இந்து அமைப்பினர், நேற்று முன்தினம் மாலை, வீதி, வீதியாகச் சென்று, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், “பந்த்’க்கு ஆதரவு கேட்டனர். இந்து அமைப்புகளின், “பந்த்’துக்கு ஆதரவு தெரிவித்து, ஓசூர் நகர் முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.

மூளை சலவை செய்து, மதமாற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி குற்றம்: டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு நூறு அடிக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். ரயில்வே ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், மூன்று பேர் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இந்து அமைப்பினர் மூன்று கடைகளை அடைக்க கூறியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடைகளை சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் ஜனபர் பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் (31), மத்திகிரி நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுமன் (24), ஓசூர் நகர அமைப்பாளர் வெங்கடேஷ் (28), நாகராஜ் (25), மூர்த்தி (28) ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். தகவலறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினரும், இந்து அமைப்பினரும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகையிட்டு, கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். மதியம் 1 மணிக்கு பின், வழக்கம் போல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு கூறுகையில், “ஓசூர் தாலுகா பகுதியில், இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து, அமைதியான முறையில் “பந்த்’ நடத்தப்பட்டது. மூளை சலவை செய்து, மதமாற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


[1] தினமலர், மூதாட்டியை மதமாற்றம் செய்து ரூ.2 கோடி சொத்து சுருட்டல், அக்டோபர் 13, 2010,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105454

[2] ஜெஸுவைட்ஸ் என்ற கத்தோலிக்க கிருத்துவ முறைப்படி, அவர்கல் விதவைகல் மீதுதான் குறிவைத்து சொத்துக்களை சுருட்டுவர். அதே முறையைத்தான், இந்த கிருத்துவ பாஸ்டரும் செய்துள்ளான்.

[3] இப்படி இந்து ஆசிரமம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டு, இந்துக்களை ஏமாற்றி வரும், இந்த கிருத்துவர்கள் சூடு, சொரணை, மானம் எதுவும் இல்லாததாம். ஆனால், இந்துக்களை குறைகூறியே வாழ்க்கை நடத்தும் வஞ்சகர்கள்.

[4] பெயர் கூட இந்து போலத்தான் வைத்துக் கொண்டுள்ளனர். இதனால், கிராமத்தில் உள்ளவர்கள், படிக்காதவர்கள், விஷயம் அறியாதவர்கள் இந்துக்கள் என்றே ஏமாந்துவிடுவர். போதா குறைக்கு காவிக் கட்டிக்கொண்டு சாமியார்கல் போல வலம் வந்து, அதே பெயர்கலையும் வைத்துக் கொண்டுள்ளனர்.

[5] ஆதரவாக பேசுதல், மூளைச்சலவை செய்தல், மதம் மாற்றுதல், சொத்துக்களைப் பற்றி அறிந்து கொண்டு, எழுதி வாங்கிக் கொள்ளுதல் முதலியனவும் அந்த ஜெஸுவைட்களின் சதிமுறைகளே.

[6] சொத்துகளை ஆசிரமம் பெயரில் எழுதி வாங்காமல், ஏமாற்றி தன்னுடைய பெயருக்கு விற்பனை செய்ததாக எழுதி வாங்குவதும் அந்த ஜெஸுவைட்டுகளின் டந்திரவேலைகளே!

[7] பொய் சொல்லி ஏமாற்றுதல், இப்படி எல்லா குணங்களும், அந்த வஞ்சக ஜெஸுவைகளின் நரி வேலைகளை புட்டு புட்டு வைக்கிறது. பாவம், வயதான கிழவிக்கு இந்த நரிவேலைத்தனம் எப்படி தெரிந்திருக்கும்?

[8] தினமலர், கட்டாய மதமாற்றத்தை கண்டித்து இந்து அமைப்புகள் அரை நாள்பந்த், ஜூன் 18, 2010,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22139

[9] முன்பு செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கிருத்துவ அமைப்பின் இருவர் கைது செய்யப்பட்டு, பிறகு, நாடு கடத்தப் பட்டபோது, அவர்கள் நேராக சோனியா காந்தியை சந்தித்துவிட்டு சென்றதையும் நினைவு கொள்ளவேண்டும்