Archive for the ‘கேரள வனத்துறை’ Category

அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும்பல்!
Reporter shockan.blogspot.com

1

1.jpgஇப்படியுமா ஈனத்தனமாக நடந்து கொள்வார்கள் கேரள வனத்துறையினரும்… வனப் பாதுகாவல் குண்டர்களும்…?

இதோ அந்தக் கொடூரக் காட்சி…!

கொட்டிக் கொண்டிருக்கும் கும்பாவுருட்டி அருவிக்கு முன்னால்… சுமார் 20 மீட்டர் தொலைவு…

பச்சைப் பசேல் செடி கொடிகள் மரங்கள்… கரடு முரடான சரளைப் பாதை… மனைவியோடும் மகளோடும் வருகின்ற தமிழரை, மலையாள இளைஞர்கள் இருவர் வழிமறிக்கின்றனர். பின்னணி யில், நான்கைந்து பேர் பேசுவதும் மிரட்டுவதும் கேட்கிறது.

Kumbhaurutty Fallsஅந்தக் குடும்பத் தலைவரை 2 பேர் அடித்து இழுத்துக் கொண்டு போகின்றனர்.

“”அய்யோ… விட்ருங்க… விட்ருங்க… ப்ளீஸ்… ப்ளீஸ்… சேலை… அய்யோ… நகையையெல்லாம் தர்றேன்… என்னை விட்ருங்க… அய்யய்யோ என் மகளை…” அலறுகிறாள் அந்தத் தாய்.

இளம்பெண்ணை பிடித்துக் கீழே தள்ளுகிறார்கள்… அந்தப் பெண்ணும் கதறுகிறார்… செல்ஃபோன் கேமரா… செடிகொடிகளில் அலைமோதுகிறது. அடுத்த காட்சி “”இந்தப் பெண்ணையும் அப்படிப் பண்ணணும்” ஒரு ஆணின் குரல். பயந்துபோன அம்மா, மகளுக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்று அந்தக் கொடூரன்கள் சொன்னபடி இடுப்புக்குக் கீழே ஆடையின்றி… ஓட்டமும் நடையுமாய் கரடு முரடான மலைப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்.

இந்தக் காட்சி… கடந்த ஒரு வாரமாக கேரள இணையதளமொன்றில் தொடர்ந்து காட்டப்பட்டு… கேரளத்திலும் நெல்லைச் சீமையிலும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது.

இந்தக் கொடூரத்தில், வனத்துறையின் கும்பலொன்று ஈடுபட்டிருப்பதை உணர்ந்த கேரள வன அதிகாரி வர்க்கீஸ் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கொல்லம் மாவட்ட எஸ்.பி.ஹர்சிதா “”இதைப் பற்றிய ரிப்போர்ட் உடனே வேண்டும்!” தென்மலை போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கேரள சுற்றுலா தலங்களில் ஒன்றான கும்பாவுருட்டியில், ஒரு தமிழ்க் குடும் பத்திற்கு ஏற்பட்ட இந்தக் கொடூரத்தை அறிந்த கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஸ்பெஷல் டீமை உருவாக்கிக் களமிறக்கினார்.

“”இப்படிப்பட்ட ஒரு கொடுமை கும்பாவுருட்டியில் நடந்திருக்கிறதே… என்ன நடவடிக்கை எடுக்கப் போகி றீர்கள்… உடனே…!” 14.7.10 அன்று கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சதீஷன் கண்டனக் குரல் எழுப்பினார்.

“”நெட்டில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் உண்மைதான். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்!” காங்கிரஸ் உறுப்பினருக்குப் பதில் சொன்னார் கேரள வனத்துறை அமைச்சர் பிளோய் விஸ்வம்.

கேரள வனக்கும்பலால் சீரழிக்கப்பட்ட அந்தக் குடும்பம் என்னாயிற்று? யாருக்கும் தெரியவில்லை.
கும்பாவுருட்டி அருவி!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேல்கரை வழியாக, கேரள அச்சன் கோயில் செல்லும் பாதையில் கேரள மேக்கரை செக்போஸ்ட்டில் அனுமதிச் சீட்டு வாங்கி, சாலையில் இருந்து இடதுபுறம் இறங்கும் கரடுமுரடான மலைப்பாதை யில் 500 மீட்டர் நடந்தால்… மனதை வருடும் இயற்கை எழில் கொஞ்சும் கும்பாவுருட்டி அருவியைத் தரிசிக்கலாம்.

“”நான் ரெண்டு மூணு முறை கும்பா வுருட்டிக்கு டூரிஸ்டுகளை கூட்டிப் போயிருக்கேன். ஃபேமஸான இடம்தான் ரொம்ப அழகா இருக் கும்…. ஆனால் ரொம்ப ஆபத்தான ஸ்பாட்டுங்க அது. பட்டப் பகல்ல கூட நடமாட்டம் இருக் காது. காரை ரோட்ல நிப்பாட்டி இறக்கி விடு வோம்… அருவிக்கு போறவங்க யாரும் சந் தோஷமா வர்றதேயில்லை. என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டார்கள். ஆனால் அழுது கொண்டே வருவார்கள். இலஞ்சியைச் சேர்ந்த ஒரு இளம்ஜோடி… கல்யாணமாகி ஒருசில நாட்களாகியிருக்கும். கும்பாவுருட்டி போக ணும்னு என் வண்டி யில ஏறுனாங்க. அங்கே போனதும்… 1 மணி நேரத்தில் வர் றோம் வெயிட் பண்ணுனு சொல்லிட்டு போனாங்க… ஆனா 3 மணி நேரம் கழிச்சு சேலை ரவிக்கை எல்லாம் அலங்கோலமா… மூச்சிறைக்க ஓடி வந்தாங்க. “யூனிபார்ம் போட்ட மூணு நாலு ஃபாரஸ்ட் காரங்களும், இன்னும் நாலஞ்சு ரவுடிங்களும் என்னைக் கட்டிப் போட்டுட்டு என் மனைவியை கெடுக்கப் பார்த்தானுங்க… தப்பி ஓடிவந்தோம்’னு சொன்னாங்க… என்கிட்ட மறைக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். போலீஸுக்கு போகலாம்னு சொன்னேன்… வேண்டாம்னு சொன்னாங்க. அன்னையில இருந்து யாரையும் நான் கும்பா வுருட்டிக்கு கூட்டிப் போனதில்லை!” செங்கோட்டை வாடகைக் காரோட்டி கிருஷ்ணன் சொன்ன பதைபதைப்பு இது.

கடந்த மே மாதம்… தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கும்பாவுருட்டியின் அழகை ரசிக்கவும், குளிக்கவும் தன் மனைவியோடும் 15 வயதான மகளோடும் காரில் சென்றார்.

கேரள வனக்குழுவினர் 6 பேர் இந்தக் குடும் பத்தை சுற்றி வளைத்து “”பாண்டிக்கார பய பொண்டாட்டியையும் குட்டி மோளையும் நமக்கு கூட்டி வந்தூ…” என்று சுற்றி வளைத்திருக் கிறார்கள். அந்தத் தொழிலதிபரை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு, அவர் கண்ணெதிரில் அவர் மனைவியையும், மகளையும் சிதைத்து அனுப்பி யிருக்கிறார்கள்.

“”ஏன் போலீசில் புகார் செய்யவில்லை?”

“”அங்கே போலீஸ் இல்லை. போலீசில் புகார் கொடுக்க வேண்டுமென்றால், அங்கிருந்து திரும்பி அச்சன்கோயில் வழியாக செங்கோட்டை வந்து மீண்டும் புளியரை வழியாக தென்மலை போலீஸ் ஸ்டேஷன் போகணுமாம்… சுமார் 100 கி.மீ. சுற்றியாகணும்… அப்புறம்… நம்ம குடும்ப கவுரவத்தையும்…” என்று தேம்பினா ராம் அந்தத் தொழிலதிபர்.

புளியங்குடியில், கல்வி நிறுவனம் ஒன்றின் முக்கிய பொறுப்பிலிருக்கும் இந்த இளைஞர், கடந்த மாதம் கும்பாவுருட்டிக்கு மனைவி யோடு போயிருக்கிறார்.

அங்கே நடந்த வன்முறைப் பலாத்கார முயற்சி இவரை மிகக் கடுமையாகப் பாதித் தது. கும்பாவுருட்டியில் இருந்து ஆவேசமாக வும், பதட்டமாகவும் திரும்பிய இவர், தனது மனைவியை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு மைத்துனரை அழைத்துக் கொண்டு புளியரை வழியாக தென் மலைக் காவல்நிலையத்திற்கு சென்றார். செல்லுமுன் நமக்குப் போன் செய்து “”ஒரு அவசரமான, கொடுமையான செய்தி… இப்ப தென்மலை போலீஸ் ஸ்டேஷன் போறோம். போய் வந்து உங்களிடம் எஃப்.ஐ.ஆர். காப்பியோடு நடந்ததைச் சொல்கிறேன். காலையில் கட்டாயம் வீட்டுக்கு வாருங்கள்!” என்றார். மறுநாள் காலையில் புளியங்குடியில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்றோம்.

வீங்கிய முகத்தோடு நம்மை எதிர்கொண்ட அவர் “”ஸாரி… ஸாரி.. உங்களை அலைய வச்சிட்டேன்… நடந்த எல்லாத்தையும் போலீஸ்ல புகாரா கொடுக்கணும்… நக்கீரன்ட்டயும் சொல்ல ணும்னுதான் உங்களை வரச் சொன்னேன். ஆனால் சொல்ல முடியாது… சொல்லிப் பிரயோசனம் இல்லை…!’‘.

“”சார்… உங்க மாதிரி படிச்சவங்க கூட மானம் மரியாதைனு மறைக்கிறதால்தான் கேரள வனக்கும்பலின் கொடூர அட்டகாசம் பயமில்லாமல் தொடருது… அதுக்கு ஒரு முடிவு கட்டணும் சார்… தென்மலை போலீஸ்ல புகார் கொடுத்தீங்களா… இல்லையா?” என்றோம்.

“”கும்பாவுருட்டி ஃபாரஸ்ட் கும்பலே பரவா யில்லை… தென்மலை போலீஸ்காரங்க தமிழன் னால அவ்வளவு கேவலமா நடத்துறானுங்க. கும்பாவுருட்டில நடந்தது எல்லாத்தையும் ஆங்கிலத்தில எழுதிக் கொண்டு போயி ருந்தோம். “இங்கிலீஸ் எழுத்தை பதிவு செய்ய முடியாது. நீ சொல்லு நாங்க மலை யாளத்தில எழுதிக்கிறோம். நீ கையெழுத்து போட்டுட்டு கிளம்பு’னு சொன்னாங்க. அவங்க மலையாளத்தில என்ன எழுதுவாங்கனு நமக்கு எப்படித் தெரியும்? எஃப்.ஐ.ஆரை ஆங்கிலத்தில்தான் எழுதணும்னு சொன்னோம். அதனால ரொம்ப கேவலமா பேசி… ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க… புகாரை திருப்பி எடுத்துட்டு வந்துட்டோம்… வேண்டாம் எதையும் எழுத வேண்டாம்… அந்தப் பாவிகளுக்கு கடவுள் கூலியைக் கொடுப்பார்!” என்று நம்மை அனுப்பி வைத்தார் அந்தப் புளியங்குடிக்காரர்.

கடைசியில்… பாதிக்கப்பட்ட யாரும் புகார் கொடுக்காமலே… தாங்களே தங்கள் குடிபோதையில் நடத்திய கொடூரத்தை செல் கேமராவில் எடுத்தனுப்பி… கேரளாவையும், நெல்லைச் சீமையையும் கலங்கடித்திருக்கிறார்கள் கும்பாவுருட்டி வனத்துறைக் குண்டர்கள்.

Kumbavurutty Sex Torture Image Grab From Anweshanam.comகண்ணால் கண்ட ஆதிவாசிப் பெண்!

“”கடந்த இரண்டாண்டுகளாக நடக்கும் இந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான்கு புகார்கள் கொளத்து புழா காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது” என்கிறார் இந்த வீடியோ காட்சிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த அன்வேஷனம் (விசாரணை) இணைய தள இதழின் ஆசிரியர் சுல்பிகர், “”இதை அரங்கேற்றும் கொடுமைக்காரர்கள் அனைவரும் கேரள வன பாதுகாப்பு கமிட்டி என்கிற சங்கத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியினர் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் சேர்ந்து உருவாக்கிய அமைப்புதான் இந்த சங்கம். இவர்களைப் பற்றி தொடர்ந்து புகார்கள் எங்களுக்கு வந்தது. இதையடுத்து அந்தச் சங்கத்தில் ஒருவரைப் பிடித்து அவரது கைகளாலேயே அந்தக் கொடுமைக் காட்சிகளை பதிவு செய்ய வைத்தோம். இக் கொடுமையைச் செய்தவர்கள் என அச்சன்கோயிலைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகளான சோக்கு (எ) மணிகண்டன், அந்துருமான் ஷாஹீர், அஜயன் ஆசாரி ஆகிய மூவரை கேரள மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களின் அராஜகங்களை நான் என் கண்ணால் பார்த்தேன் என ஒரு தமிழ் ஆதிவாசி பெண்ணும் தைரியமாக சாட்சியமும் அளித்துள்ளார். புலனாய்வுச் செய்திகளில் நக்கீரனே எனக்கு ரோல்மாடல். நக்கீரன் மீது அரசுகள் காட்டிய அடக்குமுறையைப் போலவே கேரளாவை ஆளும் சி.பி.எம். அரசின் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் வெளியிட்ட வீடியோ பொய் என நிரூபிக்க எங்களது அலுவலகத்தில் ரெய்டெல்லாம் நடத்தினார்கள். கடைசியில் உண்மை வென்றது” என்கிறார்.

தமிழ்ப் பெண்களை மிரட்டி கற்பழித்தோம்

நெல்லை செங்கோட்டையை ஒட்டிய கேரள கும்பாவுருட்டி அருவிக்குச் சுற்றுலாச் செல்லும் தமி ழகப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை அதிர்ச்சி சி.டி. ஆதாரத்தோடு “அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும் பல்’ என்ற தலைப்பில் 17.7.10 இதழில் வெளியிட்டி ருந்தோம். கேரள காவல்துறை உடனடியாக களத்தில் இறங்கியது.

கேரள வனத்துறையின் உளவுப் பிரிவு விசாரணை நடத்துமென்றார்கள் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வமும் வன அதிகாரி வர்க்கீசும்.

கேரள உள்துறை அமைச்சரான கொடியேறி பால கிருஷ்ணன், எதையும் தட்டிக்கழிக்கும் தென்மலைக் காவல்நிலையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் கொல்லம் டி.எஸ்.பி. வரதராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக குளத்துப்புழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது.

கொல்லத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனும் சாகுல்ஹமீதும் உன்னிகிருஷ்ணனும் கைது செய்யப் பட்டு, கும்பாவுருட்டிக்கு கொண்டுவரப்பட்டார்கள்.

இந்த மூவரும் கேரள அச்சன்கோயிலைச் சேர்ந்தவர்கள். கேரள வனத்துறை யால் அமைக்கப்பட்ட வனப்பாது காப்புக் குழுவில் உறுப்பினர்கள்.

ஏற்கனவே “சிறப்பு’க் கவனிப் பால் கிறங்கிப் போயிருந்த அவர்கள் மறுபடியும் உடம்பை புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

“”சொல்லுங்கடா…?” -இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் விசாரித்தார்.

“”மலையாளிகள் யாரும் இங்கே வருவதில்லை. தென்காசி, செங் கோட்டை, இலத்தூர் பகுதி தமிழர் கள்தான் வருவார்கள். குழந்தை, குட்டிகளோடு வருபவர்களை நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. நல்ல மனிதர்களாக நடந்துகொள் வோம். இளம் தம்பதிகள்… காதல் ஜோடிகள் இப்படிப்பட்டவர்களிடம் தான் தப்பு செய்தோம்.”

“”எவ்வளவு காலமாக இப்படிச் செய்கிறீர்கள்?”

“”இப்பதான் ஒண்ணரை வருஷ மாக.”

“”எத்தனை கொலை செய்திருக் கிறீர்கள்?”

“”சார்… அதைச் செய்யவே யில்லை சார்!”

“”ஆண்களை என்ன செய்வீர்கள்?”

“”அடிச்சு விரட்டிவிடுவோம் சார்… எதிர்த்தான்னா மரத்தில் கட்டிப் போடுவோம்.”

“”இவனுங்க சொல்றானுங்க… நீ மட்டும் ரவுடி மாதிரி நிக்கிறே… சொல்டா… சொல்லுடா…” 43 வயது உன்னிகிருஷ்ணன் கன்னத்தில் பளாரென விழுந்தது உபசரிப்பு.

“”வர்ற டூரிஸ்ட்ல பெண்களா பார்த்து… “கும்பாவுருட்டி சாதாரண அருவிதான்… அந்தப் பாறைகளைக் கடந்து போனால் மணலாறு காணலாம் சூப்பரா யிட்டிருக்கும்’னு இரக்கமா, பணிவா பேசுவோம். தமிழ்ப் பொண்ணுங்க நம்பிடுவாங்க. பட்டப்பகல்தானேன்னு நம்பி எங்க பின்னாடி வருவாங்க. பாறையிடுக்குக்குப் போனதும் கத்தியைக் காட்டி, திமிர விடாம நெனைச்சதை முடிச்சிக்குவோம்.”

“”யாரும் போலீஸ்ல புகார் கொடுக்க லையா?”

“”இது அசிங்கமா யிருக்குல்ல… கொடுக்க மாட்டாங்க சார்…”

“”இப்ப வெப்சைட்ல நக்கீரன்ல வந்த படம் எல்லாம் எப்ப எடுத்தது? யார் எடுத்ததுடா?”

“”என்சனங்கில்… எங்க ஆசை, சல்லாபம் எல்லாம் முடிஞ்சதும் அவங்களை நிர்வாணமா… விதம் விதமா செல்கேமராவில் படம் புடிச்சி… அதை புளூஃபிலிம் சி.டி.யாக்கி கேரளாவுல உள்ள முக்கிய நகரங்கள்ல எங்களுக்கு நம்பிக்கையான கடைகளில் விற்பனை செய்தோம். இதுல எங்களுக்கு தொடர்ந்து நல்ல வருமானம் கிடைச்சது. அப்படி விற்பனை செஞ்ச ஒரு சி.டி.தான் எப்படியோ அந்த நெட்காரங்களுக்கு கிடைச்சு… எங்களை மாட்ட வச்சிருக்கு சார். இந்த தாயும் மகளும் சி.டி.யும் எங்களோடதுதான். ஆனால் எப்ப எடுத்ததுனு ஞாபகம் இல்லை சார்.”

ஸ்பாட் என்கொயரியை முடித்துக் கொண்டு சாலைக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரை சந்தித்து விசா ரணையின் போக்கு பற்றி கேட்டோம்.

“”பாதிக்கப் பட்ட யாராவது ஒருத்தர், எங்கா வது புகார் கொடுத் திருந்தாலும், ஆரம்பத்திலேயே இந்தக் கொடூரத்தை தடுத்திருக்கலாம். புகார் கொடுக்காததால் ஒன்றரை வருடமா ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

இந்த 3 பேரையும் இப்போது ரிமாண்ட் செய்து விட்டு பிறகு போலீஸ் கஸ்டடியில் எடுத்து தனித் தனியே விசாரிக்க வேண்டும். இவர்கள் மட்டும்தான் செய்தார்களா? இவர்கள் பின்னால் வனத் துறையினர் யாராவது இருக்கிறார்களா என்பதை அடுத்தகட்ட விசாரணை மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்” என்றார் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார்.

ஆனால்… நம்மைத் தொ டர்புகொண்ட கொல்லம், குளத்துப்புழா பகுதி மீடியா நண்பர்களோ… “”நோ கம்ப்ளைண்ட்ஸ்… அதனால… இந்த அளவோட விசா ரணையை முடித் துக் கொண்டுவிடப் போகிறார்கள். பாதிக் கப்பட்டவர்கள் யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே… விசாரணையும் நடவடிக்கையும் தீவிரமாகும்” என்றார்கள்

——————————

கும்பாவுருட்டி பாலியல் பலாத்கார வழக்கில் 3 சுற்றுலா கைடுகள் கைது

செவ்வாய்க்கிழமை, ஜூலை 20, 2010

Kumbavuruti Molestation Case

பெயித் அசம்பிளி சர்ச்சில் பாதிரியார் கற்பழிப்பு, செக்ஸ் டார்ச்சர்

செக்ஸ், பண மோசடி:  மத போதகர் மீது  மேலும் 2 பெண்கள் புகார்

குழந்தை-கொலை செய்து ரத்தம் குடித்த முஸ்லீம் மந்திரவாதி அப்துல் கபூர் கைது

குழந்தையை நரபலி கொடுத்த  “சைக்கோ” மந்திரவாதி  மதுரை ஜெயிலில் அடைப்பு:  கள்ளக்காதலி ரமலாபீவி   திருச்சி கொண்டு செல்லப்பட்டார்

பள்ளி மாணவி கற்பழிப்பு செக்ஸ் வீடியோ-பள்ளி முதல்வர் கைது

index%5B1%5D.jpg

pd01.jpg?w=450

Manipur-boys-girls-sexually-harassed13-germans-stayed-in-sriperumpudur-orphanage.jpg?w=449&h=95shady_homes_orphanages.jpg?w=450&h=537

ootyfather.jpg