கிறிஸ்துவான கர்த்தர் இயேசு தரும் வட்டி- 5 மடங்காகும்- 500 கோடி பெந்தகோஸ்தே சர்ச் ஊழல்- பாதிரியார் புகார்

Posted: ஓகஸ்ட் 29, 2012 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி

கிறிஸ்தவ மதபோதகர்களை ஏமாற்றி 500 கோடி வரை மோசடி செய்த ஜான் பிரபாகர்!

“ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட்’

 திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரபாகர். கிறிஸ்தவரான இவர் ஹிம் டிரஸ்ட்  என்ற பெயரில் ஒரு சமூக சேவை நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறி பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் சத்தீஷ்கர், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மதபோதகர்களை அழைத்து வந்து கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.

அந்த கூட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் அவர்களுக்கு இரண்டு மாதத்திற்கு மாதம் 2500 ரூபாய் வீதமும், அதற்கு அடுத்து ஓராண்டு காலத்திற்கு மாதம் ரூ.5000 வீதமும் பணம் தருவோம். எனவே நீங்கள் மக்களிடம் இதை எடுத்துச் சொல்லி வசூல் செய்து கொடுத்தால் உங்களுக்கு இதன் மூலம் ஆயிரக் கணக்கில் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பி மதபோதகர்கள் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடி வரை வசூலித்து கொடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் அதே போல ரூ.500 கோடி பணத்தை வசூலித்து கொடுத்துள்ளனர். இரண்டு மாதங்கள் மட்டுமே இவர்களுக்கு பணத்தை அனுப்பிய ஜான் பிரபாகர் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து தமிழக போதகர்கள் ஐக்கிய சங்கம் மற்றும் அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ஜான் பிரபாகர் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Pastor 20120828a_005101015

Pastors 28_08_2012_003_035

http://indianschristians.wordpress.com/2011/12/18/1922/

http://indianschristians.wordpress.com/2012/02/13/1964/

Pastor 20120829a_003101010

Pastor Xan pension28_08_2012_003_012

இரட்டிப்பு பணம் தருவதாக, மாநிலத்தில், 105 முகவர்களை நியமித்து, 12,500 பேரிடம், 13 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக, திருவள்ளூர் அருகே கைதான பாதிரியார், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி,58. பாதிரியாரான இவர், அங்குள்ள இம்மானுவேல் சர்ச்சில் ஊழியம் செய்து வந்தார். இவர், பட்டாபிராம் பகுதியில், “ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை பெயரில், 2010 ஜனவரியில் தொடங்கப்பட்ட சீட்டு கம்பெனியில், மாநில பொறுப்பாளராக இருந்து வந்தார்.

இவரால், கமிஷன் அடிப்படையில் நியமிக்கப்பட்ட முகவர்கள், 10,500 ரூபாய் செலுத்தினால், முதல் இரண்டு மாதங்கள், 2,700 ரூபாய் தருவதாகவும், 3வது மாதம் முதல், 10வது மாதம் வரை, இரட்டிப்பாக, 5,400 ரூபாய் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, மக்களிடம் பணம் வசூலித்தனர்.

ஆனால், கூறியபடி அவர்களுக்கு பணம் தரவில்லை. இதையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசில், பாதிக்கப்பட்ட, 75 பேர் புகார் கொடுத்தனர். தொடர்ந்து, வேப்பம்பட்டு பவானி நகர் வினோத்குமார்,44, அவரின் மனைவி எஸ்தர்,31, மாமியார் குளோரி,48, ஆகிய மூன்று முகவர்களை, போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

பாதிரியார் கைது : விசாரணையில், “மாநில அளவில் அறக்கட்டளையின் பொறுப்பாளரான திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் அந்தோணி தான், எங்களை முகவர்களாக நியமித்தார்’ என கூறினர். இதையடுத்து, பாதிரியார் அந்தோணியை, நேற்று முன்தினம் செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கைது செய்தனர். பின், டி.எஸ்.பி., பாலச்சந்தர் முன்னிலையில், பாதிரியார் அந்தோணி வாக்குமூலம் அளித்தார்.

105 முகவர்கள் மூலம்… : வாக்குமூலத்தில், “நான், ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட் சீட்டு கம்பெனியின் மாநில பொறுப்பாளராக உள்ளேன். இதற்கு, உரிமையாளராக பட்டாபிராமைச் சேர்ந்த ஜான் பிரபாகர் உள்ளார்.

சீட்டுப்பணம் வசூலிக்க, பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், அயனம்பாக்கம், பேரம்பாக்கம், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 105 முகவர்களை, கமிஷன் அடிப்படையில், கடந்த, 2010ம் ஆண்டு நியமித்துள்ளேன்’ என்றார்.

ஏமாந்தது 12,500 பேர் : மேலும், “அவர்கள் மாநிலம் முழுவதும், இதுவரை, 12,500 பேரை உறுப்பினர்களாக நியமித்து, பணம் வசூலித்துக் கொடுத்துள்ளனர். இவ்வாறு, 31 கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில், முறைப்படி உறுப்பினர்களுக்கு, 18 கோடி ரூபாய், செப்டம்பர் மாதம் வரை, மாதந்தோறும் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

அறக்கட்டளையில் இருந்து பணம் வராததால் தான், கொடுக்க முடியவில்லை என்றும் கூறினார். “கடந்த, அக்டோபர் மாதம் முதல், ஐந்து மாதங்களாக, சீட்டு கம்பெனியின் உரிமையாளரான ஜான் பிரபாகரிடம் இருந்து, பணம் வரவில்லை. இதனால், மீதமுள்ள, 13 கோடி ரூபாய் பணத்தை, உறுப்பினர்களுக்கு கொடுக்க முடியவில்லை. அவர் பணம் கொடுத்தால் தான், நான் உறுப்பினர்களுக்கு பணம் தர முடியும்’ என, வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

ஆந்திராவில் கம்பி எண்ணும் உரிமையாளர் : இதுகுறித்து, திருவள்ளூர் டி.எஸ்.பி., பாலச்சந்தர் கூறும்போது, “”சென்னை புறநகர் பகுதியான பட்டாபிராமைச் சேர்ந்த முதல் குற்றவாளியான ஜான் பிரபாகர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமங்களில், இதேபோல் இரட்டிப்பு பணம் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதும், அவர் மீது மங்காபுரம், காவாளி, நெல்லூர், பட்டர்குண்டா ஆகிய போலீஸ் நிலையங்களில், வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது” என்றார்

மேலும், “”இவ்வழக்குகள் சம்பந்தமாக, ஆந்திர மாநில போலீசார், கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி, ஜான் பிரபாகரை கைது செய்து, கர்னூல் மாவட்டம், நந்திகோட்டூர் சிறையில் அடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய உள்ளோம். அதன் பின் தான், பணம் இரட்டிப்பு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழுத் தகவல்கள் கிடைக்கும்” என்றார்.

Aphro esduass20120828a_005101014

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s