வேளாங்கண்ணி மாதா கோவிலில் ஏசுவின் கண்ணீர் -இல்லை சாக்கடை நீர் என நிருபித்த கிறிஸ்துவருக்கு ஜெயில் தண்டனை

Posted: மே 14, 2012 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி

http://www.thehindu.com/opinion/lead/article3391109.ece

இக்கட்டுரை இந்துவில் மே 7-ம் தேதி வந்துள்ள INDIA’S GOD LAWS FAIL THE TEST OF REASON என்ற கட்டுரையின் மொழியாக்கம்.  

அர்த்தமில்லாத மதச் சட்டங்கள்

http://dharumi.blogspot.in/2012/05/569.html

இக்கட்டுரை இந்துவில் மே 7-ம் தேதி வந்துள்ள INDIA’S GOD LAWS FAIL THE TEST OF REASON என்ற கட்டுரையின் மொழியாக்கம்.  

இக்கட்டுரைக்கும், என் பதிவொன்று தமிழ்மணத்தால் நிறுத்தப்பட்டதற்கும் நிச்சயமாக எவ்விதத் தொடர்புமில்லை. 

சென்ற மார்ச் மாதத் துவக்கத்தில் பம்பாயில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் உள்ள சிலுவையின் அடிப்பாகத்திலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழுந்தது. நம்பிக்கையோடு பலரும் வந்து அந்த நீரைக் குப்பிகளில் எடுத்துக் கொண்டு போனார்கள். இது சிலுவையிலுள்ள ஏசுவின் கண்ணீர் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. இது தங்கள் தொல்லைகளை நீக்கும்; வியாதிகளைக் குணமாக்கும் என்ற ஆவல் அவர்களுக்கு.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் இந்தக் கோவிலுக்கு அகில உலக பகுத்தறிவுவாதிகளின் சங்கத்தின் தலைவர் சானல் இடமருக்குசென்று வழிவது ஏசுவின் கண்ணீரல்ல; கட்டிக்கிடந்த சாக்கடை நீரே capillary action மூலம் கசிந்து வந்தது என்று கண்டுபிடித்துள்ளார்.

Sanal EdamarukuPresident Rationalist International

இந்தக் ‘கண்டுபிடிப்பிற்காக’ அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இதோடு அவர் கோர்ட், கேஸ் என்று சில ஆண்டுகளாவது அங்குமிங்கும் அலைய வேண்டியதிருக்கும். மத வெறுப்பை வளர்ப்பதற்காக அவர் மீது மூன்று காவல் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால சானல் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டார். ஏற்கெனவே சத்திய சாயி பாபா போன்றோரின் ஏமாற்றுகளைத் தோலுரித்தவர் இவர்.

இந்தியக் குடியுரிமையில் மக்கள் ‘அறிவியல் மனப்பான்மையோடும், மனித நேயத்தோடும், கேள்வி மனப்பான்மையோடும், புதியன கண்டுகொள்ளும் ஆவலுடனும்’ இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த சாத்தியங்களுக்காகப் போராடுபவரை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க முற்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பின் 295 சட்டம் மதக் கோட்பாடுகளைக் காத்து நிற்கின்றது அதன் தொடர்பான 295A மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்கின்றது. 153B மத, மொழி, இன, சாதீய உணர்வுகளை மீறுவோருக்கான தண்டனையைக் கூறுகிறது. ஆனால், இச்சட்டம் உண்மைகளுக்கு மட்டும் இடங்கொடுக்க மறுக்கிறது. சட்டத்தின் துவக்க நாளிலிருந்து இன்று வரை இந்தச் சட்டங்கள் மதக் கோட்பாடுகளின் மீது கேள்வியெழுப்பும் பல அறிஞர்களை, கலைஞர்களைத் தண்டிக்கத்தான் அதிகம் பயன்பட்டது.

1993-ல் தில்லியில் ’சஹ்மாத்’ – Sahmat – என்ற அமைப்பு பலவித ராமாயணங்களைப் பற்றிய ஒரு கண்காட்சி அமைத்தது. ரொமிலா தாப்பர் போன்ற அறிஞர்களை இவைகள் கவர்ந்தாலும், இந்த அமைப்பின் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. பஞ்சாபில் இத்தகைய வழக்குகள் மிக அதிகம். சமயத் தொடர்பான, அகாலித் தளத்தின் மீது கேள்வியெழுப்பும் தலித்தியம் முன்னெடுக்கும் புதிய கருத்துகள் மீது வழக்குகள் குவிந்து விடும்.

சீக்கியர், இந்துக்களுக்கு சலித்தவர்கள் நாங்கள் அல்ல என்று காட்டுவது போல் இஸ்லாமியரும் இதே அளவு ‘உற்சாகத்தைக்’ கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ’சாத்தானின் வேதம்’ என்ற நூலை வாசித்ததிற்காக பெயர் பெற்ற நான்கு எழுத்தாள்ர்கள்  மீது சட்டம் பாய்ந்தது. இஸ்லாமியரின் தீவிர அடிப்படைவாதிகளைப் பற்றிய அச்சம் எங்கும் உண்டு. 1995-ல் எழுத்தாளர் காலித் ஆல்வி 1933-ல் கடவுளுக்கு எதிரான கவிதை என்று தடை செய்யப்பட்ட, ஆனால் புதிய பாதையைக் காண்பிக்கும் சில உருது கவிதைத் தொகுப்பொன்றை Angaarey என்ற தலைப்பில் வெளிக்கொண்டு வந்தார். அவைகளில் உள்ள பல வரிகள் நீக்கப்பட்டன. 2006-ல் இந்தியா டுடே என்ற இதழில் காபாவின் படம் ஒன்று வெளிவந்தமைக்காக ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட போது மற்ற ஊடகங்கள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை.

இறை நம்பிக்கைகள் கூட சில சமயங்களில் நம்பிக்கையுள்ளவரையும் தண்டனையோடு தீண்டி விடுகின்றன. சென்ற ஆண்டு ஜெயமாலா என்ற பழைய நடிகை, உன்னி கிருஷ்ணா என்ற ஜோதிடர், அவரது துணையாளர் ரகுபதி ஆகியோர் அந்த நடிகை ஐயப்பனைத் தீண்டி விட்டதற்காக கேரளா நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டார்கள். பொதுவாகவே நீதியரசர்கள் பக்தி முயற்சிகளைக் கண்டிக்க வேண்டியதிருந்தாலும் வீண் வம்பென்று நினைத்தோ அச்சத்தாலோ ஒதுங்கி விடுகிறார்கள். 1958-ல் ஈ.வே.ரா. பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க முயற்சித்த போது நீதிமன்றங்கள் திணறின. கீழ் நீதிமன்றங்கள் பிள்ளையார் சிலை புனிதப் பொருளல்ல என்று தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் ’உண்மையோ பொய்யோ, சமய நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிப்பளிக்க வேண்டும்’ என்று கூறின.

சமயங்களுக்கான இழிவு:

1957-ல் உச்ச நீதிமன்றம் 295A சட்டத்திற்கு சில வரையறைகள் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் ‘எந்த ஒரு இழிவையும் தண்டிப்பதில்லை; ஆனால் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் இழிவை ஏற்படுத்தினால் தண்டனைக்கு வழியாகும்’ என்றது. ஆனால் உண்மையில் மதங்களை இழிவு படுத்துவது என்ன என்பது வரையறைக்கப்படவில்லை. 1998-ல் பி.வி. நாராயணாவின் ‘தர்மகாரனா’ என்ற பரிசு பெற்ற, இந்து சமயப் புனிதர் பஸ்வேஷ்வரா என்பவரின் வரலாற்று நூலை கர்நாடக அரசு தடை செய்ததை உச்ச நீதி மன்றம் அனுமதித்தது. அதேபோல் 2007-ல் மும்பை உயர் நீதிமன்றம் ‘இஸ்லாம்’ என்ற தலைப்பில் ஆர்.ஐ.. பாஸின் என்பவர் இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தாக்கி எழுதிய நூலை மகாராஷ்ட்ர அரசு தடை செய்ததை அனுமதித்தது. இவ்வாறு தடை செய்யப்படும் பல நூல்களில் சில பொறுப்பற்றதாக, தூண்டி விடுவதாக இருக்கலாம், ஆனால் பல தரமான நூல்களும் அரசுகளால் தடை செய்யப்பட்டு விடுகின்றன.

எதிர்வரும் ஆபத்து:

1924-ல் ஆர்ய சமாஜ் சார்ந்த மஹாஷே ராஜ்பால் ’வண்ண மயமான தூதுவர்’ – Rangila Rasul – என்ற தலைப்பில் இஸ்லாமிய நம்பிக்கைகளை எதிர்த்து எழுதிய நூலில் இருந்தே இந்த போராட்டம் தொடங்கியது. கீழ் வழக்கு மன்றங்கள் அவருக்கு சிறை என்று தீர்ப்பளித்தன. ஆனால் லாகூர் உயர் நீதி மன்றத்தின் நீதியரசர் டலிப் சிங் ‘தீர்ப்பளிக்க மக்களின் எதிர்ப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் தூதுவரின் வரலாற்றைப் பற்றியெழுதும் ஒரு சிறந்த வரலாற்றாசிரியனின் நூலும் அந்த வரையறைக்குள் வந்துவிடும்’ என்றார்.
1927-ல் சுதந்திரத்திற்கு முன்பு இந்திய மேல்சபையில் இந்த தீர்ப்பு பலரால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எம்.ஆர். ஜெயகர் சமய அடிப்படைவாதம் ஒரு மன நோய் என்றார். அந்த நோய்வாய்பட்டவர்களை மற்ற சாதாரண மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்க வேண்டுமென்றார். ஆனால் இந்த அறிவுசார்ந்த சிறந்த முடிவு பொதுவான ஒரு முடிவாக இல்லை; அதற்குப் பதில் ரங்கிலா ரசூல் போன்ற நூல்கள் தண்டிக்கப்படக் கூடியவையே என்று முடிவானது. (இன்னும் ‘இந்தக் கதை’ தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது!)

சமயச் சட்டங்கள் அதற்கேற்றாற்போல் திருத்தப்பட்டன. ஆனாலும் பாகிஸ்தானில் இருப்பது போன்று யாரையும் கொல்லும் அளவிற்கு இந்தியச் சட்டங்கள் செல்லவில்லை என்பதற்கு நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இடமருக்கு மேல் உள்ள வழக்குகள் நாம் இந்தப் பிரச்சனையில் எங்கிருக்கிறோம் என்பதை நமக்குத் தெளிவாக விளக்கி விடும். பக்கத்து நாட்டு பயங்கரம் நம் நாட்டில் இல்லாமல் போக வேண்டுமானால் மக்கள் தாங்கள் விரும்பும் கொள்கைகள் மீதான கடுமையான சாடல்களையோ, இழிவுகளையோ பொறுத்துக் கொள்வதே சரியாக இருக்கும்.

தூதுவர்கள் நடத்திய அற்புத செயல்கள் பக்தியினால் எழுந்த வெறும் ஏமாற்று வித்தைகள்தான். அவைகள் வெறும் பக்திகரமான கதையாடல்களே. எல்லா சமயங்கள் போதிக்கும் பாடங்கள் எல்லாமே தவறு; உண்மையல்ல. இதற்கான ஒரே சான்று: ஒவ்வொரு மதமும் தங்களுக்குள் வேறுபட்டு நிற்கின்றன. பாரம்பரியமும் சோம்பேறித்தனமும் தான் மனிதர்கள் மதங்களை நம்புவதற்கான ஒரே காரணம். சமயங்களின் வேறுபாடுகளே மனிதர்களுக்குள் பல போர்களை ஏற்படுத்தியுள்ளன. மேலும் மதங்கள் தத்துவ எதிர்பார்ப்புகளுக்கும், அறிவியல் தேடலுக்கும் எதிரானவை. வேத நூல்களாக்க் கருதப்படுபவைகள் எல்லாமே எந்த வித பயனுமில்லாத வெறும் புத்தகங்களே.’ மேற்கண்டவற்றை மருத்துவ அறிஞரான அபு பக்கர் முகமது இப்ன் ஸக்கரியா-ராஸி என்பவர் 864-ம் ஆண்டு கூறியுள்ளார். இவர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் காலிப் அபு அல்-காசிம் அப்ட்’அல்லாவினால் நடத்தப்பட்ட மருத்துவ மனையில் உயர் பதவியிலிருந்து, பெரும் பணி புரிந்து, தன் மாணவர்களின் மத்தியில் நன் மரணம் அடைந்தார். நல்ல வேளை … ஒரு வேளை இன்றைய இந்தியாவில் அவர் இருந்திருந்தால் அவரது கருத்துக்களினால் அவரது இறுதிக்காலம் அந்த அளவு அமைதியாக இல்லாமல் போயிருந்திருக்கும்.

Indian rationalist under attack for exposing Catholic Church “miracle” !

Sanal Edamaruku, the founder president Rationalist International and the president of the Indian Rationalist Association, is under attack by the Catholic church leaders for exposing a “miracle”. According to the email I received, he will be arrested soon for blasphemy as an array of cases has been filed against him in Mumbai, India. The email is reproduced below.

Sanal Edamaruku under attack for exposing Catholic “miracle” !
As he exposed the “miracle” of the drippling Jesus in Mumbai, revengeful Catholic Church leaders vowed to harass Sanal Edamaruku with an array of blasphemy cases. The harassment has started. Sanal can be arrested any moment.

“It is nothing new that the Catholic bishops try to sentence their opponents to the stake when they run out of arguments.  Giordano Bruno’s is a case in point. But try as they may, they cannot stop me to stand for reason, science and historic facts. And I am not alone. Freedom of expression is under attack and we are going to defend it!” – Sanal Edamaruku

Exposing the “miracle”
On 10th March, Sanal Edamaruku flew to Mumbai. The TV channel TV-9 had invited him to investigate a “miracle” that caused local excitement. He went with the TV team to Irla in Vile Parle to inspect the crucifix standing there in front of the Church of Our Lady of Velankanni. This crucifix had become the centre of attraction for an ever growing crowd of believers coming from far and wide. The news of the miracle spread like wild fire. For some days, there were little droplets of water trickling from Jesus’ feet. Hundreds of people came every day to pray and collect some of the “holy water” in bottles and vessels. Irla was about to become a pilgrimage centre.

But Sanal Edamaruku spoilt this prospect. Within minutes, he clearly identified the source of the water (a drainage near a washing room) and the mechanism how it reached Jesus feet (capillary action). The local church leaders, present during his investigation, were far from pleased. See the investigation in detail on YouTube.

TV debate with the Bishop
Some hours later, in a live program on TV-9, Sanal explained his findings and accused the Catholic Church of miracle mongering, as they were beating the big drum for the drippling Jesus statue with aggressive PR measures and by distributing photographs certifying the “miracle”. A heated debate began, in which the five church people, among them Fr. Augustine Palett, the priest of Our Lady of Velankanni church, and representatives of the Association of Concerned Catholics (AOCC) demanded that Sanal apologize. But he powerfully argued against them. Via telephone, Msgr. Agnelo Gracias, auxiliary bishop of Mumbai, intervened in order to rescue the image of the Catholic Church. He claimed the Church was “always cautious in attributing supernatural causes” to such phenomena and always striving “to find ‘scientific’ explanations.” He even assured the Pope was a friend of science. Sanal countered elegantly, referring to the case of Giordano Bruno. He also discussed the Vatican’s official process of canonization in which “miracles”, certified by a Vatican commission, are obligatory for every saint. Since there are more than 10,000 Catholic saints, the Vatican surely qualifies for “miracle mongering”.  And the allegedly so science-loving Pope allows exorcism in the Vatican itself. According to recent press reports, he even personally lent a hand to cast out the devil from the body of a Swiss Guard man. In this highly interesting debate, Sanal triumphed over his shouting opponents. The whole TV program is recorded. You can watch an abridged version of it on YouTube.

Threat live on TV
When they saw their hopes dashed to force Sanal to his knees and apologize, they publicly threatened to file a blasphemy case against him. Sanal pointed out that this would give him an excellent opportunity to support all his statements with evidence in a court of law, with the bishop of Mumbai in the witness box. Foaming with rage, the church people vowed to harass him by filing an array of cases against him in all Mumbai police stations. They did.
Sanal can be arrested any moment

We know of three petitions on the base of Article 295, Indian Penal Code that have been filed against Sanal.

Meantime, Mumbai police announced that they were out to arrest him.

Sanal can be arrested any moment. In every single place where a petition is filed against him. He could be forced to appear in person to answer them. If his answer is not found satisfactory, he could be arrested. He could be forced to fight a multitude of criminal cases in different places. This is not only immensely time and money consuming. Given the fanaticism of some Catholic believers, it can be a danger for his life.

Sanal Edamaruku Defence Committee
Rationalist International has formed a Sanal Edamaruku Defence Committe. The convener is Supreme Court lawyer and Human Rights activist Mr. N.D.Pancholi.

For more information visit www.rationalistinternational.net

Advertisements
பின்னூட்டங்கள்
  1. L.C.NATHAN சொல்கிறார்:

    KIRUSTHUVAM SEIUM ANIYAYANGKAL VELIVARA KAARANAMAANA THANGALUKKU, NANTRI !!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s