பிரபுதேவா மதம் மாறி ஞான ஸ்நானம் செய்து கொள்ள வேண்டும் -நயன்தாரா

Posted: ஓகஸ்ட் 4, 2011 in Uncategorized
குறிச்சொற்கள்:, , , ,

ஞான ஸ்நானம்? மாஸ்டரை வற்புறுத்தும் நயன்தாரா!

          

மாஸ்டரின் மனசு மல்யுத்த களமாகி கிடக்கிறதாம். நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த நாளில் இருந்தே ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார் பிரபுதேவா. விவகாரத்துக்கு சம்மதிக்க முடியாது என்று மல்லுக்கட்ட ஆரம்பித்த மனைவி ரமலத் வெயிட்டான ‘கொடுக்கல் வாங்கலுக்கு’ பிறகுதான் சம்மதித்தார் என்பதும், இந்த விஷயத்தில் இன்னும் சில மிச்ச சொச்சங்கள் இருந்து வருகின்றன என்பதும் வாசகர்கள் அறியாதது அல்ல.
பிரபுதேவாவுக்கு வந்திருக்கும் தற்போதைய பிரச்சனை ரொம்பவே சிக்கலானது. நயன்தாரா தீவிரமான ரோமன்    கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். ஆகஸ்ட்டுக்கு பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கும் நயன்தாரா குடும்பம் ஒரு கண்டிஷன் போடுகிறதாம் மாஸ்டருக்கு.
   நீங்கள் மதம் மாறி ஞான ஸ்நானம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன். இதை எதிர்பார்க்காத பிரபுதேவா, என்ன இப்படியெல்லாம் சொல்றாங்க என்று நயன்தாராவிடம் புலம்பியதாகவும் தகவல்கள் கசிகின்றன. தனது வருங்கால கணவருக்காக பெற்றோரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? :தமிழ் திரையுலகில் பரபரப்பு

  

நடிகர் பிரபுதேவா – நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி – பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் எங்கேயும் காதல் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். இப்ப‌டத்தின் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் என்ற கிசுகிசு கிளம்பியது. அதனை வழக்கம்போலவே ஹன்சிகா மறுத்தார்; பிரபுதேவா மவுனம் காத்தார். இப்போது சூட்டிங் முடிந்து ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் மீண்டும் கிசுகிசு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் இந்த புது ஜோடியை ஹோட்டலில் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா, ஹன்சிகா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் பிரபுதேவா வழக்கம்போல மவுனம் காக்கிறார். (ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் அரும்பியபோதும் சார் இப்படித்தானே மவுனம் காத்தார்).
ஆனால் ‌‌கோலிவுட்டில் ‌தமன்னாவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் ஹன்சிகா, தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை இந்த காதல் கிசுகிசு பாதிக்கும் என நினைத்து அதிரடியாக விளக்கமொன்றை கொடுத்திருக்கிறார். அம்மணி அளித்துள்ள பேட்டியில், “எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது.
 
அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை. பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை, என்று கூறியுள்ளார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s