ஜார்ஜ் வில்லியம்-தாய் தந்தையை கொலை செய்து செப்டிக் டாங்கில் வீசினர்

Posted: ஜூலை 19, 2011 in Uncategorized
Police-sub-inspector-kills-his-own-father-and-mother-disposing-their-remains-in-septic-tank-காவல் துறை உதவி ஆய்வாளராக வேலை பார்த்த பெற்ற மகனால் கொல்லப்பட்ட பெற்றோர்!!!!

சென்னை, ஜூலை. 7-  சென்னை கோட்டூர்புர காவல்துறையில்   சிறப்பு உதவி- ஆய்வாளராக (Sub-inspector) பணிபுரியும்  ஜார்ஜ் வில்லியம், சென்னை கொளத்தூரில் உள்ள காந்திநகர் புத்தகரத்தில் வசித்து வருகிறார் .

ஜார்ஜ் வில்லியத்தின் பெற்றோர், தந்தை  லோகநாதன் (வயது70) தாயார் சிந்தாமணி (62)  ஆகியோர் வேலூர் மாவட்டம் ஆம்பூரிலுள்ள பெத்தலகேம் 7-வது தெருவில் அவர்களது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

20110708a_007101008-john-william.jpg?w=640&h=1024லோகநாதன் முன்னால் காவல்துறை தலைமை காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மதுரவாயிலில் வேலை பார்த்து ஓய்வு பெற்று ஆம்பூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில காலம் முன்னர் ஜார்ஜ் வில்லியத்தின் பெற்றோர் இருவரும் திடீரென காணமல்போனதாக தெரிகிறது.

இதையடுத்து, துணை ஆய்வாளர் ஜார்ஜ் வில்லியம், கடந்த 22.10.2010 அன்று தனது பெற்றோர் இருவரையும்  காணவில்லை எனவே, அவர்களை தேடி கண்டுபிடித்து தர ஆவன செய்யும் படி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவே,  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

காவல் துறை விசாரணையில், ஜார்ஜ் வில்லியாத்தின் பெற்றோரான லோகநாதன், மற்றும் சிந்தாமணி ஆகிய இருவரும் கடந்த 5.10.2009 அன்று கடைசியாக  தங்களது ஓய்வூதிய பணத்தை ஆம்பூரிலுள்ள ஒரு வங்கியிலிருந்து எடுத்துள்ளனர்.

இறுதியாக வங்கியில் தங்களது ஓய்வூதிய பணத்தை எடுத்த இந்த தம்பதி அதன் பின்னர் பணத்தை எடுக்க வரவில்லை. இதன் பின்னர் அவர்கள் என்னவானார்கள் என்று தேறாத நிலையில், ஓராண்டுகள் கழித்தே ஜார்ஜ் வில்லியம் தனது பெற்றோரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இது காவல்துரைனருக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி இருந்தாலும், காணாமல் போனவர்களை பற்றிய தக்க ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், திரும்பி வார்வார்கள் என்ற நம்பிக்கையில் ஜார்ஜ் வில்லியம் காலம் கடத்தி இருக்கலாம் என்ற அனுமானத்திலும்,  ஜார்ஜ் வில்லியத்தின் மீது நடவைக்கை எடுக்காமல் , தமது விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ஜார்ஜ் வில்லியம் சில தினங்களுக்கு முன்னர் ஆம்பூர் வந்து,  ஒரு ஆட்டோ டிரைவருடன் தனது பெற்றோரது வீட்டின் கழிவறை அருகே இருந்த, செப்டிக் டேங்கை திறந்து பார்த்த பொது, அதனுள்ளே ஒரு ஆணின பிணம் மற்றும் ஒரு பெண்ணின் மண்டை ஓடுகளும் கிடந்ததை கண்டுள்ளனர்.

இதுகுறித்து ஜார்ஜ் வில்லியம் ஆம்பூர் டவுன் காவல் துறையினருக்கு,  தகவல் தெரிவிகைவே, போலீசார் விரைந்து வந்து செப்டிக் டேங்கில் இருந்த எலும்பு கூடுகளை மீட்டு, மண்டை ஓடுகளையும், எலும்புக் கூடுகளையும் அடையாளம் காண்பதற்காக மரபணு  டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், மண்டை ஓடுகளும், எலும்பு கூடுகள், ஜார்ஜ் வில்லியத்தின் பெற்றோரான, ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு லோகநாதன் மற்றும்  அவரது மனைவி சிந்தாமணியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை  நடத்திய

அதிகரிகளுக்கு, தங்களது துறையை சார்ந்தவரயினும் சிறப்பு துணை-ஆய்வாளர்  ஜார்ஜ் வில்லியதின் நடத்தை மீதே  சந்தேகம் வலுத்துள்ளது.

குறிப்பாக தனது பெற்றோர் காணாமல் போனது குறித்து புகார் அளித்த ஜார்ஜ் வில்லியம்,  காவல்துறை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்பதில் ஆர்வமாகவும் வேகமாகவும் இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

எனவே ஜார்ஜ் வில்லியத்திடம் ‘கிடுக்கி பிடி’ விசாரணை நடத்திய அதிகாரிகளிடம், பதில் சொல்ல திணறிய ஜார்ஜ் வில்லியம், தனது பெற்றோர் காணாமல் போனது பற்றி சரியான பதில் கூற முடியாமல் மாற்றி மாற்றி பேசியதில், காவல்துறை அதிகாரிகளே அதிர்ந்து நடுங்கும் வகையிலான ஒரு பயங்கர உண்மை தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் வில்லியம் தனது பெற்றோரை தானே சில கூலிப்படை ஆட்கள் துணையுடன் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலைசெய்திருக்கின்றான்.

இரு ஆண்டுகளுக்கு முன்னர், லோகநாதன், சிந்தாமணி தம்பதி இறுதியாக  5.10.2009 அன்று ஓய்வூதிய  பணம் எடுத்த பின்னரே ஜார்ஜ் வில்லியம் இந்த கொடூர மாபாதக கொலையை செய்துள்ளான்.

கொலைக்கு காரணமாக சொத்து தகராறு இருந்ததும், தமது வீட்டில் தூங்கிய சொந்த பெற்றோரையே, கூலிப்படை ஆட்கள் உதவியுடன், தலையணையை வைத்து அவர்கள் முகத்தில் அழுத்தி கொலை செய்த இந்த மனித ரூபத்தில் நடமாடும் மிருகத்தை விட கீழான கொடூரனின் செயல், காவல் துறை அதிகாரிகளையே அதிர வைத்துள்ளது.

பெற்றோரை கொலை செய்த இந்த கிராதகன்,  அதனை மறைப்பதற்கு, பெற்றோர் இருவரது பிணங்களை செப்டிக் டாங்கில் வீசி விட்டு, அந்த பிணங்கள் அழுகி கரையும் வரை காத்திருந்து ஒரு வருடம், கழித்து பெற்றோர் காணாமல் போனதாக நாடகமாடியுள்ளான்.

பெற்றவர்களையே கொலை செய்து செப்டிக் டாங்கில் வீசிய ஜார்ஜ்  வில்லியத்தின் கிராதகதனத்தை அறிந்தவர்கள் அதிர்ந்து, கடும் ஆளாகியுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s