கொத்தமங்கலம் முகம்மது அலி- 14 வயது மகளை பலருக்கு காம விருந்தாக்கிய தந்தை கைது

Posted: ஜூலை 6, 2011 in Uncategorized

கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை௧14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது

பாலியல் கொடுமைகளுக்குப் பெயர் போன கேரளாவில் மேலும் ஒரு பாலியல் கொடுமை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. தனது 14 வயது மகளை பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொச்சி அருகே உள்ள பரவூரைச் சேர்ந்த 18 வயது மகளை முதலில் தான் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் நூற்றுக்கணக்கானோரிடம் பணத்திற்காக அனுப்பி வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தையைப் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேர் வரை கைதாகியுள்ளனர். அரபு நாட்டு ஷேக் ஒருவரும் இதில் தொடர்புடையதாக நேற்றுதான் போலீஸார் தெரிவித்தனர். இன்டர்போல் உதவியை நாடும் அளவுக்கு தற்போது நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தனது 14 வயது மகளை பணம் வாங்கிக் கொண்டு பலருக்கும் போகப் பொருளாக்கிய இன்னொரு கேடு கெட்ட தந்தையை போலீஸார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.

கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அலி.இவர் தனது 14 வயது மகளை (இந்த சிறுமி பள்ளியில் படித்து வருகிறார்) பணம் வாங்கிக் கொண்டு பலருக்கு விபச்சாரத்திற்காக அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மூன்று மாதமாக இந்த சித்திரவதையில் சிக்கித் தவித்து வந்தார் அந்த சிறுமி. வீடுகளுக்கு அனுப்பாமல், கார்கள், ஆட்டோக்களில் வைத்து இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் காமாந்தகர்கள்.

முகம்மது அலியின் இந்த அக்கிரமச் செயல் குறித்து கொத்தமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபாஷுக்குத் தகவல் போனது. இதையடுத்து அவர் நேற்று அதிரடியாக செயல்பட்டு முகம்மது அலியைப் பிடித்தார். அப்போது அவரது மகளும் அப்போது உடன் இருந்தார். இருவரிடமும் நடத்திய விசாரணையின்போதுதான் அலியின் அக்கிரமச் செயல் தெரிய வந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில் 19 வயதான ஷாகுல், 19 வயதான துர்ஹான் ஆகியோரும் பிடிபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் கர்ப்பமடைந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அரசு மருத்துவமனைக்குக் கூட்டி்ச சென்று மருத்துவப் பரிசோதனையை செய்தார் அலி என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.

சிறுமியை தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர் போலீஸார். அவரிடம் விசாரணை நடத்தும்போது என்ன தகவல் கிடைக்கப் போகிறதோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளால் கேரளாவே அதிர்ந்து போயுள்ளது. அதிலும் பெற்ற தந்தைகளே இவ்வாறு கொடிய செயல்களில் ஈடுபடுவது கேரள மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி -ஈழதேசம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s