கன்னியாஸ்திரி கடிதத்தில் பாதிரியார் செக்ஸ் லீலைகள் அம்பலம்: மேலும் 2 கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பு

Posted: ஒக்ரோபர் 19, 2010 in இந்தியா இயேசு, இயேசு, காமவெறி, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, செக்ஸ் வீடியோ, தோமையார், பரிசுத்த ஆவி
கன்னியாஸ்திரி எழுதிய 4 பக்க கடிதத்தில் பாதிரியார் செக்ஸ் லீலைகள் அம்பலம்: மேலும் 2 பெண்களுடன் தொடர்பு
திருச்சி, அக்.19-
Rajaratnam, Principal St.Joseph, Trichyதிருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியார் ராஜரத்தினம் மீது ஆண்டிமடம் தஞ்சன்வாடியை சேர்ந்த கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
பாதிரியார் ராஜரத்தினம் 2006-ம் ஆண்டில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும் அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பலமுறை உடல் உறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து பாதிரியார் ராஜரத்தினம் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்ப பாதிரியார் ராஜரத்தினம் மதுரை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிரியாருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்றும் அவர் மேலும், 2 கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும் கன்னியாஸ்திரி தரப்பில் வாதாடப்பட்டது.
பாதிரியார் தன்னை எப்படி வற்புறுத்தி வீழ்த்தினார் என்றும் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும் பிளாரன்சு மேரி 25.8.2010-ல் சபைக்கு 4 பக்க கடிதம் கொடுத்து உள்ளார். அதில் பாதிரியார் செக்ஸ் லீலைகள் பற்றி விரிவாக கூறியுள்ளார். அவர் தமிழில் எழுதி கொடுத்த கடிதம் தற்போது புனித அன்னாள் சபையிடம் உள்ளது. அதை பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
அந்த கடிதத்தில் பிளாரன்சு மேரி, பாதிரியார் ராஜரத்தினம் தன்னை வற்புறுத்தி வலையில் வீழ்த்தியது, கர்ப்பம் ஆக்கியது, கருக்கலைப்பு செய்தது வரை குறிப்பிட்டுள்ளார். நடந்த தவறுக்கு மன்னிப்பு அளித்து தன்னை மீண்டும் சபையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் பிளாரன்சு மேரி எழுதிய கடிதத்தை சபையின் முக்கிய பிரமுகர் அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து உள்ளார். அப்போது பிளாரன்சு மேரி குறிப்பிட்டதுபோல கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு, பாதிரியார் ராஜரத்தினம் பெயர் ஆகியவற்றை எடுத்து விட்டு அதில் ஒரு பாதிரியார் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். அதில் பிளாரான்சுமேரியை வற்புறுத்தி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.
அதன் பிறகுதான் பிளாரான்சு மேரியை சபையை விட்டு நீக்கி உள்ளனர். இதனால் பாதிரியார் ராஜரத்தினத்தை அனைவரும் சேர்ந்து காப்பாற்றிவிட்டு தன்னை மட்டும் சபையைவிட்டு நீக்கி, அவமானப்படுத்தி விட்டார்களே என பிளாரன்சுமேரி மனமுடைந்தார். 1 மாதம் நிம்மதியில்லாமல் தவித்தவர் கடைசியில் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் பாதிரியாருக்கு மேலும் 2 கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பு இருந்ததை கூறியுள்ளார். தன்னை வலையில் வீழ்த்தும்போது அவர்கள் 2 பேர் பெயரை குறிப்பிட்டு அவர்களை கவனித்துக் கொண்டது போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன் என்று பாதிரியார் ராஜரத்தினம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அந்த கன்னியாஸ்திரி களில் ஒருவர் பாதிரியாருக்கு 2004-ல் பிளாரன்சுமேரியை அறிமுகப்படுத்தியவர். மற்றொருவர் தற்போது வெளி மாநிலத்தில் உள்ளார்அன்னாள் சபை நிர்வாகி, கன்னியாஸ்திரி மரியதங்கம், பிளாரன்சுமேரியின் தோழிகள், 3பாதிரியார்கள், கருக்கலைப்பு செய்த பெண் டாக்டர் ஆகியோரிடம் கோட்டை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
பாதிரியார் மேலும் 2 கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்று கூறப்படுவது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கன்னியாஸ்திரி பிளாரன்சு மேரி கற்பழிக்கப்பட்டது உண்மை: மருத்துவ பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

கன்னியாஸ்திரி கற்பழிப்பு பாதிரியாருக்கு ஆண்மை சோதனை

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி- பாதிரியார் ராஜரத்தினம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து… கற்பழித்து…

கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்: மறியலுக்கு முயன்ற 79 பேர் கைது


Advertisements
பின்னூட்டங்கள்
  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    ம்ம் பாவம் இயேசு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s