திருச்சி கல்லூரி முதல்வர்திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்புப் புகார்

Posted: ஒக்ரோபர் 15, 2010 in இந்தியா இயேசு, இயேசு, காமவெறி, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, செக்ஸ் வீடியோ, தோமையார், பரிசுத்த ஆவி

Principal Rajarathinam with Former President Kalamதிருச்சி: திருச்சி யில் உள்ள மிகவும் பிரபலமான புனித ஜோசப்ஸ் (தூய வளனார்) கல்லூரி முதல்வரான பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி என்பவர் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில், மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன்.

திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் அவ்வப்போது, திருச்சி கலைக் காவேரி கல்லூரிக்கு வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. 22.01.2006 அன்று கல்லூரிக்கு என்னை அழைத்தார். அப்போது குளிர்பானம் கொடுத்தார். அதில் நான் மயக்கம் அடைந்தேன். அப்போது என்னை அவர் கற்பழித்தார். இதை செல்போனில் படம் பிடித்துக் காட்டி, பலமுறை என்னிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்ப்பமானேன். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார். திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். மதுரை மாநில சேசு சபை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊழியர்கள் சேவியர், சேவியர் வேதம் இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை [^] எடுக்கவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.

புகாரை ஏற்ற போலீசார், மேரியை மருத்துவப் பரிசோதனை [^] செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சியின் மிகவும் பழமையான, பிரபலமான கல்லூரி தூய வளனார் கல்லூரி. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படித்த கல்லூரி இது. இக்கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s