திருச்சி லுத்தரன் சபையின் ஊழல்-கலவர அபாயம் -கொலைக் கூலிப்படை

Posted: ஒக்ரோபர் 3, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி

“”எங்கள் திருச்சபையில் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் செகரட்டரி ஏவிய கொலைக் கூலிப் படையால் எனக்குக் கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. என் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறையிடமும் புகார் கொடுத் திருக்கிறார் தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பிஷப் மார்ட்டின்.

தமிழகத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருச்சபை, தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள் என சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இந்தத் திருச்சபைக்கு உண்டு. கேரளம், அந்தமான், பாண்டிச்சேரி, ஆந்திராவில் விரிந்து பரந்துள்ள இந்த திருச்சபையின் தலைமையிடம் திருச்சியில் உள்ளது. அங்குதான் இந்த உயிர்ப்பயமும் ஊழல் குற்றச்சாட்டும்!

“”என்ன நடக்கிறது உங்கள் திருச்சபையில்?” -பிஷப் மார்ட்டினிடம் கேட்டோம்.

“”ஜனவரி மாதம் நடந்த பிஷப் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். செயலாளர் சார்லஸின் அக்கா கணவர் ஸ்டீபன் சுந்தர்சிங் என்னை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்றார். பிஷப்பாக நான் ஜெயித்து தேர்வு பெற்றேன். ஆனால் நிர்வாகக் கமிட்டிக்கு வெற்றி பெற்றவர்கள் அத்தனைபேரும் செயலாளர் சார்லஸ் ஆட்கள். என்னிடம் கேட்காமலே, எங்கள் குருமார்கள் 140 பேரில் 78 பேரை ஒரேநாளில் இட மாற்றம் செய்துவிட்டார் சார்லஸ். சென்னை புரசைவாக்கத்தில் மேகலா தியேட்டர் அருகில் 3300 சதுர அடி இடத்தை 4 கோடிக்கு விற்றுவிட்டு 40 லட்சம் கணக்கு காட்டினார்கள். இதனால் அந்த கமிட்டியைக் கலைத்தேன். அதனால்தான் தினம் தினம் குத்துவேன், வெட்டுவேன் என யார்யாரோ கொலை மிரட்டல் விடுகிறார்கள். என் அலுவலக பூட்டை உடைத்து ஆக்குபை செய்துகொண்டார்கள். விபரீதமும் கலவரமும் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால்தான் புகார் கொடுத்தேன்” என்கிறார் பிஷப் மார்டின். திருச்சபை வளாகத்திற்குள் போலீஸ் படையுடன் நுழைந்த கோட்டை ஏ.சி. சீனிவாசனிடம் பேசினோம்.

“”சார்லஸ் குரூப்பை இங்கிருந்து வெளியேற்றிவிட்டோம். அந்த குரூப் பயன்படுத்திய வாகனங்களையும் கைப்பற்றிவிட்டோம். இனி கலவரம் ஏற்படாது” என்றார் ஏ.சி.

தலைமறைவாக இருக்கும் திருச்சபை செயலாளர் சார்லஸை தொடர்புகொண்டோம்.

“”நிர்வாகக் குழுவைக் கலைப்பதற்கு பிஷப்புக்கு அதிகாரம் இல்லை. பழனி கோர்ட்டில் நாங்கள் இடைக்காலத் தடை வாங்கி விட்டோம். எல்லா பத்திரங்களும் அவரிடம்தானே இருக்கும்.

 அவருக்குத் தெரியாமல் நாங்கள் மட்டும் எப்படி சொத்துக்களை விற்க முடியும். தனது சொந்தக்காரர்களுக்கு போஸ்டிங் போட வேண்டும். நிறைய பங்கு பணம் வேண்டும் என்று கேட்டுத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் பிஷப்” என்கிறார் சார்லஸ்.

“தமிழ்நாடு சுவிசேஷ லுத் தரன் திருச்சபை பிஷப்பும் செக ரட்டரியும் நெருங்கிய உறவினர்கள் தான். அவர்களே ஒருவருக்கொரு வர் சேற்றை வாரிப் பூசிக்கொண்டு கலவரச் சூழலை உண்டாக்கி எங்க ளைக் கவலைப்பட வைக்கிறார் களே’ என்று லுத்தரன் கிறிஸ் தவர்கள் புலம்புகிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s