அருமனை அருகே ஆலயத்தில், மாதா சிலை உடைப்பு; போலீஸ் சூப்பிரண்டு, டி.ஆர்.ஓ. நேரில் விசாரணை

மேல்புறம், செப். 7-

அருமனை அருகே    ஆலயத்தில், மாதா சிலை உடைப்பு;    போலீஸ் சூப்பிரண்டு, டி.ஆர்.ஓ. நேரில் விசாரணை
அருமனை அருகே தச்சூர் கோணம் பகுதியில் புனித மரிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இப்போது திருவிழா நடந்து வருகிறது. நேற்று 6-வது நாள் திருவிழா நடந்தது.
இதையொட்டி ஆலயமும், அதன் முன்பு உள்ள குருசடியும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
திருவிழா நாட்களில் தினமும் மாலையில் மறையுரை, திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆலயத்தில் நடைபெறும். நேற்று இரவு 11.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின்பு ஆலய பங்குதந்தை ஏசுதாஸ் ஆலயத்தில் இருந்து தனது இல்லத்துக்கு சென்றார். அதன்பின்பு ஆலய கதவுகள் மூடப்பட்டன.
இன்று அதிகாலை 5 மணிக்கு ஆலயத்தில் மீண்டும் பிரார்த்தனைகள் தொடங்கியது. இதற்காக மக்கள் காலையிலேயே ஆலயத்திற்கு வந்தனர். அப்போது ஆலயத்தின் முன்புறம் உள்ள குருசடியில் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது குருசடியில் வைக்கப்பட்டு இருந்த மாதா சிலையும் உடைந்து கிடந்தது.
அருகில் ரத்தக்கறையும் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் சிலை உடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இதற்கிடையே தச்சூர் கோணம், அருமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பலரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டி.ஆர்.ஓ. கலைசெல்வன், தக்கலை ஆர்.டி.ஓ. பொன்னுச்சாமி, தக்கலை டி.எஸ்.பி. நடராஜ மூர்த்தி, தாசில்தார் முருகேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரித்தனர். இதில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் யாரோ மர்ம நபர்கள் ஆலயத்திற்குள் புகுந்து குருசடியில் இருந்த மாதா சிலையை உடைத்து இருக்கலாம் என்று தெரிகிறது.
கண்ணாடியை உடைத்த போது ரத்தம் வடிந்திருக்கலாம் என்றும் கருதினர். அவர்கள் யார்? எதற்காக சிலையை உடைத்தனர். திரு விழா நேரத்தில் இது போன்று சம்பவங்களில் ஈடுபட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அதுவும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்க
ள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s