குடவாசல்அருகே கோஷ்டி மோதலில் ஜமாத் தலைவர் உள்பட இருவர் சுட்டுக் கொலை

Posted: செப்ரெம்பர் 7, 2010 in Uncategorized

First Published : 07 Sep 2010 12:00:00 AM IST

திருவாரூர், செப். 6: திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கோஷ்டி மோதலில், ஜமாத் தலைவர் உள்ளிட்ட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
குடவாசல் அருகேயுள்ளது திருவிடைச்சேரி கிராமம். இங்கு 300 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றன. ரமலான் நோன்பு காலம் என்பதால் அங்குள்ள பள்ளிவாசலில் அனைவரும் தொழுகை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே ஊரைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த அ. குத்புதீன், தனது ஆதரவாளர்களுடன் ஒரு வீட்டில் தனியாக தொழுகைகளை நடத்தி வருகிறாராம்.
இதுகுறித்து ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் ஜமாத்தார்கள் குத்புதீனை அழைத்து விசாரித்து, அனைவரும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்த வேண்டும் என ஹள்வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே லேசான உரசல் இருந்துள்ளது.
இந் நிலையில், குத்புதீனுக்கு ஆதரவாக அவரது மைத்துனர் தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடியைச் சேர்ந்த ஹாஜி முகமது தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் 3 கார்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளிவாசல் அருகே வந்தனர்.
அப்போது, தொழுகை முடிந்து பள்ளிவாசலுக்கு வெளியே பேசிக் கொண்டிருந்த ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயிலை, குத்புதீன் ஆதரவாளர்களில் ஒருவர் கையால் தாக்கினராம். அவர் கூச்சல் போட்டவுடன், அங்கிருந்தவர்கள் கூடியுள்ளனர்.
அப்போது ஒரு நபர் கைத்துப்பாக்கியால் ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில் (55), ஹக்கீம் முகமது (50) ஆகியோரை துப்பாக்கியால் சுட்டார். இதில், இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். விழுதியூரைச் சேர்ந்த பால்ராஜ் (60), இவரது மகன் ராமதாஸ் (30), சந்தியாகு (30), ஹாஜா மைதீன் (35) ஆகிய நால்வரும் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருவாரூர் எஸ்.பி. மூர்த்தி, தஞ்சாவூர் எஸ்.பி. செந்தில்வேலன் தலைமையிலான போலீஸôர் திருவிடைச்சேரி சென்று, விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் ஹாஜி முகமது என்பவரை போலீஸôர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
சிதம்பரம்: துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்த சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளியான ஆடுதுறை திருமங்கலக்குடி குறிச்சிமலையைச் சேர்ந்த ஹஜ்முகமது (50) மற்றும் அவரது ஆதரவாளர்களை குடவாசல் போலீஸôர் தேடி வந்தனர். இந்நிலையில் ஹஜ்முகமது சிதம்பரம் எண்-2 குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நீதிபதி ஈஸ்வரமூர்த்தி முன்னிலையில் சரணடைந்தார்.
÷ஹஜ்முகமதுவை செப்டம்பர் 13-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s