ஜெனரல் டயர் தேசிய தலைவரா- கிறிஸ்துவ வெறி?

Posted: ஓகஸ்ட் 16, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம்

379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்

திருநெல்வேலி : சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் யார் தேசிய தலைவர், யார் நமது போராட்டத்தை நசுக்கினர் என தெரியாமல், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம். இதற்கு உதாரணம், சிவகாசியைச் சேர்ந்த அச்சகத்தார்.

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்களின் படங்களை வெட்டி, ஒட்டி வாருங்கள் என, பள்ளிகளில் கூறுகின்றனர். மாணவர்களோ, பெற்றோரோ, புத்தக கடைகளில் விற்கும் படங்களை ஒட்டி, அனுப்பி வைக்கின்றனர். திருநெல்வேலியில் வாங்கிய தேசிய தலைவர்களின் படத்தில், ஜெனரல் டயரின் படம் இருந்தது. ஜெனரல் டயர் 1864ல் பிறந்து 1927ல் மறைந்த ஆங்கிலேய அதிகாரி. பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் 1919ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 379 ஆயுதமில்லா அப்பாவிகளை சுட்டுக் கொன்றவன். அவனது படத்தை, சிவகாசியைச் சேர்ந்த ஒரு அச்சகத்தினர், “தேசிய தலைவர்’ என, மற்ற தலைவர்களுக்கு இடையே அச்சிட்டுள்ளனர். அந்நிறுவனத்தில் போன் செய்து கேட்டால், அதை அச்சிடச் சொன்னது கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரசுரத்தினர் என பதில் வந்தது.

இதுகுறித்து நெல்லை எஸ்.பி.,யும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஆஸ்ரா கார்க்கிற்கு புகார் வந்தது. அந்த நிறுவனத்திடம் பேசிய அவர், விருதுநகர் கலெக்டர் மூலம் அந்த அச்சகம் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இதே போல, மதுரையைச் சேர்ந்த ஒரு அச்சகத்தினர் வெளியிட்ட உலகக் கவிஞர்களின் வரிசை படங்களில், வில்லியம் வேர்ட்ஸ் ஒர்த்திற்கும், ஆமி லோவலுக்கும் வித்தியாசம் தெரியாமல் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த நிறுவனத்திடம் போன் செய்து கேட்டதற்கு, “அடிக்கடி இதுபோல தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்’ என தெரிவித்தனர். இளம் தலைமுறையினருக்கு இத்தகைய தவறான தகவல் தரும் நிறுவனங்கள் மீது, கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Dravidan சொல்கிறார்:

    Christians have no Regard for India and tamils. proved once again

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s