பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீல் கைது

Posted: ஓகஸ்ட் 7, 2010 in காமவெறி, செக்ஸ் வீடியோ

ராமேசுவரம், ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமதுரபீக் மனைவி ஜாஸ்மின்பானு (31).  ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமாரிடம் ஒரு புகார் அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
எனது குடும்ப வறுமை காரணமாக கடந்த 5-ந்தேதி ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீலை தொடர்பு கொண்டு ரூ.10 ஆயிரம் கடன் தரும்படி கேட்டேன். அவர் என்னை ராமேசுவரத்தில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறினார். அவரது பேச்சை நம்பி நான் ராமேசுவரம் சென்றேன்.பஸ் நிலையம் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு வரசொன்னார். அங்கு நகரசபைத்தலைவர் ஜலீல் உள்பட 6 பேர் இருந்தனர்.

என்னை தனி அறைக்கு அழைத்து சென்ற ஜலீல் குளிர்பானம் குடிக்கும்படி வற்புறுத்தினார். நானும் குடித்தேன். சில நிமிடத்தில் மயங்கி விட்டேன். பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. சில மணி நேரம் கழித்து எனக்கு நினைவு வந்தது. அப்போது நான் சீரழிக்கப்பட்டதை உணர்ந்தேன்.

எனது உடலில் பல இடங்களில் சிகரெட் மற்றும் பீடியை பற்ற வைத்து சூடும் போட்டது தெரிந்தது. உடனே அவர்களிடம் என்னை இப்படி சீரழித்து விட்டீர்களே என்று கதறினேன்.

உடனே அவர்கள் 6 பேரும் என்னை தாக்கினர். உன்னை கற்பழித்து ஆபாசபடம் எடுத்து விட்டோம். நீ வெளியே சொன்னால் உன் ஆபாச படத்தை வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவோம் என்று மிரட்டினர். 2 நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்து செக்ஸ்சித்ரவதை செய்தனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பி
வந்துள்ளேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி இருந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி ராமேசுவரம் போலீசுக்கு உத்தரவிட்டார். ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஜேசு ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீல், டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் ரகுபதி, ஷேக், உதயகுமார், கேசவன் ஆகிய 6 பேர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஜலீல் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது கற்பழிப்பு, ஆபாசபடம் எடுத்து மிரட்டுதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைதான நகரசபை தலைவர் ஜலீல் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது தந்தை ஜான்பாய் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57107

பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்பட 6 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்த நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
கீழக்கரை எஸ்.என்.தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மனைவி யாஸ்மின் பானு(32). இவர், ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் (தி.மு.க.,) ஜலீல் தர வேண்டிய பணத்தை வாங்க, கடந்த 5ம் தேதி மாலை 6 மணிக்கு, ராமேஸ்வரத்தில் ஜலீலுக்குச் சொந்தமான கட்டடத்திற்கு சென்றார். இவருடன் நிஷா(48)வும் சென்றார். அங்கிருந்த ஜலீல், இருவருக்கும் குளிர்பானம் கொடுத்துள்ளார். இதை குடித்த இருவரும் மயங்கினர். அரைகுறை மயக்க நிலையில் இருந்த யாஸ்மின் பானுவை, ஜலீல் மற்றும் அவருடன் இருந்த மேலும் ஐந்து பேர் கற்பழித்தனர்.
நள்ளிரவில் சுயநினைவுக்கு வந்த பின்னும், கத்தியை காட்டி மிரட்டி நிர்வாணமாக்கி, மொபைல் போனில் படமெடுத்த இவர்கள், மீண்டும் தங்களது உடல் பசியை தீர்த்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 6 மணி வரை குடிபோதையில், ஒருவர் மாற்றி ஒருவராக வெறிச்செயலை அரங்கேற்றினர். பின், “நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது’ என, மிரட்டி இருவரையும் அனுப்பினர். பாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு, ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் தெரிவித்தார். அவரது உத்தரவுப்படி, ராமேஸ்வரம் டவுன் ஸ்டேஷனில் புகார் செய்தார். நகராட்சித் தலைவர் ஜலீலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர். போனில் யாஸ்மின் பானுவை மிரட்டி எடுக்கப்பட்ட நிர்வாணக் காட்சிகள் இருந்ததை உறுதி செய்தனர்.
அவரது தகவலைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன்(45), உதயகுமார்(36), ஷேக்(42), ரகுபதி(21), ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கேசவன்(31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கமலாபாய் டி.எஸ்.பி., விசாரணை செய்து, நேற்று காலை ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் குமரேசன் உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு கூறியதாவது: நகராட்சித் தலைவர் ஜலீல் என்னிடம் கடனாக வாங்கியிருந்த 10 ஆயிரம் ரூபாயை தராததால், பல முறை கேட்டேன். பணம் தருவதாகக் கூறியதால் அவரது கட்டடத்திற்கு நிஷாவுடன் சென்றேன். குளிர்பானம் கொடுத்து, என்னை பலமுறை கெடுத்தனர். கத்தியைக் காட்டி நிர்வாணமாக்கி மொபைல் போனில் படமெடுத்த ஜலீல், இன்டர்நெட்டில் போட்டு மானத்தை வாங்கி விடுவேன் எனக் கூறி, மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் கெடுத்தார். சிகரெட்டால் சுட்டு, அடித்து சித்ரவதை செய்தார். இவ்வாறு யாஸ்மின் பானு கூறினார்.

நகரத் தந்தையின் கேங் ரேப்!

ராமேஸ்வரம் தி.மு.க. சேர்மன் மீது எழுந்திருக்கும் பகீர்ப் புகாரால் சங்கடத்தில் கைபிசைந்து கொண்டிருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட உ.பி.க்கள். சேர்மன் ஜலீல் தன் சகாக்கள் 6 பேருடன் கைதாகி கம்பி எண்ணிக்கொண்டிருக்க… இதற்குக் காரணமான யாஸ்மின் பானுவிடம் என்ன நடந்தது என்றோம்.

“”எனக்கு சொந்த ஊர் கீழக்கரை. என் கணவர் சென்னையில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கு. என் கண வரின் நண்பர்தான் சேர்மன் ஜலீல். பல முறை என் கணவரோடு என் வீட்டிற்கு ஜலீல் வந்திருக்கிறார். இந்த பழக்கத்தின் அடிப்படையில் கொஞ்ச நாட்களுக்குமுன் 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் கடனாக வாங்கிச்சென்று திருப்பித் தராமல் இழுத்தடித்தார். தொடர்ந்து கேட்டபோது என்னை ராமேஸ்வரத்துக்கு வரச்சொன்னார். நானும் என் தோழி நிஷாவை துணைக்கு அழைத்துக்கொண்டு ராமேஸ் வரம் போனேன். அங்கு பஸ் ஸ்டாண்டில் என்னை பிக்கப் செய்துகொண்ட ஜலீல் தன் ஐஸ்பிளாண்ட் ஆபீசுக்கு பணம் கொடுப்பதாக அழைத்துச்சென்றார். அங்கு அவர் கொடுத்த கூல்டிரிங்ஸைக் குடிச்சேன். எனக்கு தலை சுத்தல் உண்டா னது. அப்போது.. “என்ன தைரியம் இருந்தா பணம் கேட்டு வருவே’ என்றபடி ஜலீலும்… அவர் நண்பர்களும் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். அதோடு உடம் பெங்கும் சிகரெட்டால் சூடுவைத்தும் கத்தியால் கீறியும் சித்ரவதை செய்தனர். உச்சகட்டமா தங்கள் செல் போனாலும் அந்த அசிங்கமான கொடுமைகளை… படம் பிடிச்சாங்க. இனி பணம் கேட்டா அந்தப் படங்களை இண்டர்நெட்டில் போட்டுவிடுவதாக மிரட்டி.. என்னை அடித்துத் துரத்திவிட்டார் ஜலீல்”’என்றபடி கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

யாஸ்மினோடு ஜலீலைப் பார்க்க சென்ற நிஷாவிடம்… “உங்களுக்கு அந்த ஜலீல் டீம் டார்ச்சர் கொடுக்கலையா?’ என்றோம். நிஷாவோ… “”நான் வெளியில் தப்பிப்போய் தகவலை பரப்பிடக்கூடாதுன்னு என்னையும் நிர்வாணப்படுத்தி உட்கார வச்சாங்க. அதைப் படமும் எடுத்தாங்க. ஆனா பாலியல் ரீதியா அவங்க யாஸ்மினைத்தான் குதறியெடுத்தாங்க. எல்லோரும் கஞ்சா போதையிலும் குடிபோதையிலும் இருந்ததால்… என்னால யாஸ்மினைக் காப்பாத்த முடியலை. அவங்க செஞ்ச கொடுமைகளுக்கு நான்தான் நேரடி சாட்சி”’என்றார் எந்த சலனமும் இல்லாமல்.

நாம் கீழக்கரையில் யாஸ்மின் பற்றி விசாரித்தோம். அங்கிருந்த த.மு.மு.க.பிரமுகர் ஒருவர் ‘””யாஸ்மினின் நடத்தை யைப் பிடிக்காமல்தான் அவள் கணவர் அவளைப் பிரிஞ்சி போய்ட்டார். நிஷாவோட சேர்ந்து யாஸ்மின் பல லாட்ஜுகளுக்குப் போனதா பேச்சு அடிபடுது. இதைத் தவிர வேறு எதையும் சொல்ல விரும்பலை”’என்று முடித்துக்கொண்டார்.

“”சேர்மன் பதவிக்கே தகுதியில்லாத ஆள் ஜலீல். இவர் மீது ஆறேழு வழக்கு பதிவாகியும் சில போலீஸ் அதிகாரிகளின் தயவால் இவர் இத்தனை நாள் தப்பிச்சிக்கிட்டே வந்தார். இப்படிப்பட்ட ஒருத்தரை நகரத்தந்தை என்று சொல்லவே வெட்கமாக இருக்கு. இவரைப் பதவியில் இருந்து நீக்கணும்னு வலியுறுத்தி நாங்க தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போறோம்” என்கிறார் சி.பி.எம். பிரமுகர் செந்தில்வேல்.

சேர்மன் மீதான புகாரால் பரபரப்பில் மூழ்கியிருக்கிறது ராமேஸ்வரம்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. saintthomasfables சொல்கிறார்:

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57757
  முதல்வரின் “கிரீன் சிக்னல்’ பின்பே நகராட்சி தலைவர் கைது : டி.எஸ்.பி .,க்கே தெரியாமல் மறைப்பு
  ராமேஸ்வரம் :ராமேஸ்வரத்தில் “கேங் ரேப்பிங் ‘ கில் ஈடுபட்டநகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீலை, முதல்வர் கருணாநிதியின் “கிரீன் சிக்னல்’ கிடைத்த பின்பே கைது செய்துள்ளனர். இது டி.எஸ்.பி.,க்கே தெரியாமல் நடத்தப்பட்டுள்ளது.

  ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் “கேங் ரேப்பிங் ‘ கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் “அட்மிஷன்’ போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.

  இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த “ஆபரேசனை’ முடித்துள்ளனர். வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க ,ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

  இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். “கேங் ரேப்பில்’ ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.

  இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, “கிரீன் சிக்னல்’ கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தி.மு.க.,பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த “ஹம்லா ஆபரேசனில்’ கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை(கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  ஜாஸ்மின்பானு

  பிகர் எப்படிசார் இருக்கும்!

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் கூட கேங் ரேப்,….

 4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  மீண்டும் ஒரு பருத்திவீரன் கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s