மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார் தடுத்து நிறுத்த முயன்ற போது கடும் மோதல்

Posted: ஜூலை 28, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார்

ஈரோடு : மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார், சிறை வைக்கப்பட்டார். அவரை மீட்பதில் நடந்த முயற்சியில் இரு அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது; எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை மதுக்கூர், “தினந்தோறும் நற்செய்தி’ ஜெபக்கூட பாதிரியார் சாலமன்(30), விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா(30) ஆகியோர், ஈரோடு நாடார்மேடு பாரதிபுரத்தில் மதமாற்ற பிரசாரம் செய்தனர். இவர்களை, ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி(30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்க மாவட்ட செயலர் போஸ்முருகன்(30) ஆகியோர் தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் சாலமன் பிடிக்கப்பட்டார். ஜோஸ்வா தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட சாலமன், நாடார்மேட்டில் செல்வம் என்பவரது போட்டோ ஸ்டூடியோவில் சிறை வைக்கப்பட்டார். அங்கு வந்த விடுதலைச் சிறுத்தை அமைப்பினர், ஸ்டூடியோ கண்ணாடியை உடைத்தனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளினர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வந்த, “ஸ்கார்பியோ’ கார் பறிமுதல் செய்யப்பட்டது. சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை இரு தரப்பினரும் முற்றுகையிட்டனர்.  ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வி.சி., கொடி கட்டிய கார் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்து நின்றது. காரில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி, கார் கண்ணாடியை சிலர் உடைத்தனர். உள்ளே வி.சி., கொடி கட்டிய தடிகள் இருந்தன. காரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறி, இந்து அமைப்பினர்கள் கார் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கலைத்து, காரை அகற்றினர். அடுத்தடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டதால், ஏ.டி.எஸ்.பி.,க்கள் மகேந்திரன், செல்வகுமார் சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு வந்தனர். இரு தரப்பினரிடமும் புகார் மனு பெறப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், பட்டுகோட்டை மதுகூரைச் சேர்ந்த பாதிரியார் சாலமன், வி.சி., முற்போக்கு மாணவர் கழக மாவட்ட செயலர் அலாவுதின்(36), மாவட்ட மகிளா விடுதலை இயக்கம் அப்துல் உனிசா (42), வி.சி., மாவட்ட துணை செயலர்கள் அரசாங்கம்(45) மதிவாணன்(47), சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாலமன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி (30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் போஸ் முருகன்(30)  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கையால் தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடார் மேட்டை சேர்ந்த சுந்தரம் தலைமறைவாகி விட்டார்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. saintthomasfables சொல்கிறார்:

  பாஜக – வி.சிறுத்தைகள் மோதல்: ஈரோட்டில் பதட்டம்

  பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதலில் ஈடுபட்டதால் ஈரோட்டில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

  கிருத்துவ அமைப்பைச் சேர்ந்த மத போதகர் ஒருவர், ஈரோடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டிக்கும் விதமாக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர், அந்த மதபோதகரை கடத்தி வைத்திருந்தனர்.
  இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஈரோடு நாடார் மேடு பகுதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மத போதகரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  வாக்குவாதம் கைகலப்பாக மாறியதுடன், ஸ்டூடியோவை முற்றிலும் சேதப்படுத்தி விட்டு, மத போதகரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீட்டுச் சென்றனர். இந்த மோதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வந்த இரு சக்கர வாகனத்தையும் பாஜகவினர் சேதப்படுத்தியுள்ளனர்.

  ஸ்டூடியோவை சேதப்படுத்தியதாக பாஜகவினர், காவல்துறையிடம் புகார் கொடுத்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

  இந்த மோதலால் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
  http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=36554

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s