ஷாசமான் -செக்ஸ் வீடியோ பணம் கேட்டு மிரட்டிய காதலி கொலை

Posted: ஜூலை 23, 2010 in காமவெறி

திருவண்ணாமலை : பணம் கேட்டு மிரட்டிய காதலியை, கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (29). இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் சரவணன் இறந்து விட்டார். கல்பனா அதே கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கும், திருவண்ணாமலை மணியாரி தெருவை சேர்ந்த ஷாசமான் (21) என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. ஷாசமான் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார். கல்பனாவை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக ஷாசமான் இருந்துள்ளார்.
கல்பனா, ஷாசமானிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். ஒரு நாள் கல்பனா மொபைல்போன் மூலம் தன்னுடன் உல்லாசமாக ஷாசமான் இருப்பதை அவருக்கு தெரியாமல் படம் பிடித்தார். நேற்று முன்தினம் காலை ஷாசமானுக்கு போன் செய்த கல்பனா, “எனக்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனடியாக பணம் கொண்டு வர வேண்டும்’ என, கூறியுள்ளார். ஷாசமான் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அவரது வீட்டுக்கு சென்றார்.
கல்பனாவின் தாயும், குழந்தையும் இல்லாததால் இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது, ஷாசமான் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
கேட்ட பணம் முழுமையாக கொடுக்காததால் ஆத்திரமடைந்த கல்பனா, ஷாசமானிடம் மொபைல்போனில் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்துள்ளதை எடுத்து காட்டி, “இதை வெளியில் காட்டி விடுவேன்’ என, மிரட்டல் விடுத்தார்.
இருவருக்கும் தகராறு ஏற்பட்டது, ஆத்திரம் அடைந்த ஷாசமான் கல்பனாவை தாக்கி சுவற்றில் தள்ளினார்.மயங்கி விழுந்த கல்பனாவை, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய கல்பனாவின் தாய், தன் மகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சென்று கல்பனாவின் மொபைல்போனை பறிமுதல் செய்து கடைசியாக அவருக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அந்த எண் ஷாசமானிடம் இருந்து வந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரித்ததில், ஷாசமான் கல்பனாவை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். ஷாசமானை போலீசார் கைது செய்தனர்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. ankaraikrishnan சொல்கிறார்:

    Women using Sex Vedio- freedom fully achieved

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s