விசாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.

Posted: ஜூலை 13, 2010 in இந்தியா இயேசு, இயேசு, சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி
மதுரை: மறைந்த கவியரசு கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. தந்தை வழியில் கவிதை எழுதுபவர், நல்ல பேச்சாளர். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு டிவியில் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கினார்.

இந்த நிலையில் விசாலி திடீரென கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள குட் ஷெப்பர்டு ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒயின், அப்பம் பெற்று கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளாராம் விசாலி. மேலும், தனது பெயரையும் ஜெனீபர் என மாற்றிக் கொண்டுள்ளார்.

அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் கண்ணதாசன். இந்த நிலையில் அவரது மகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

//இநநூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் ஆசியாவில் பரப்பப்படும் என்று போப் இந்திய வருகையின் போது கூறியிருந்தார். இந்து மகாசபை போன்ற இயக்கங்கள் கடுமையாக ஆட்சேபித்திருந்தன- இவர் கத்தோலிகர் ஆனாரா?-மத மாற்றத்தின் மூலம் புரட்சிஎதையும் செய்ய முடியாது.கண்ணதாசன் இவருடைய வயதில் நாத்திகராக இருந்தார். முதிர்ந்த வயதில் ஆத்மீகத்துக்கு திரும்பினார். இவரும் இவ்வாறோ தெரியாது ‘வந்ததை வரவில் வைப்போம் சென்றதை செலவில் வைப்போம்’. எல்லா மதங்களும் அன்பையே கூறுகின்றன ஆனால் இறுதியில் கொலைகளில் முடிகிறது!//

இந்து மதத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டிருந்தவரது மகள், இவ்வாறு மதம் மாறியதன் காரணம் திருமண பந்தமா அல்லது கொள்கை காரணமா என்று தெரியவில்லை, நல்லவேளை அவர் வேறு நாட்டில் பிறந்திருக்கவில்லை, தலை போயிருக்கும்!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Mahesh சொல்கிறார்:

  Must have gained hugely.

  Kannadasan also wrote Yesu Kaaviyam

 2. saintthomasfables சொல்கிறார்:

  Matra
  ஏவிம் ராஜனின் மனைவி ஒரு கிருத்துவர்.

  (கஷ்டத்தில் இருக்கும்) பிரபலமானோரை கிரித்துவ மதமாற்ற இயக்கத்தினர் தீவிரமாக Target செய்கின்றனர். இதில் ப்ரபலமான இந்துமத பக்தர்களாக இருப்பின், இவர்களுக்கு பயண் அதிகம்.

 3. saintthomasfables சொல்கிறார்:

  நெருப்பு
  பணம் படைத்தவர்களின் தேசத்தில் கிறிஸ்துவம் தேய்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கிறிஸ்துவம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதனுக்கு மரணம் இருப்பது போல் மதங்களுக்கு மரணம் இருக்கிறது. காலப்போக்கில் ஓவ்வொரு மதமும் சாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மதம் எங்கே. பழையன கழிதல், புதியன புகுதல் – இதற்கு மதங்களும் விதிவிலக்கல்ல.

 4. saintthomasfables சொல்கிறார்:

  கிருஷ்ணமூர்த்தி
  நம்பிக்கை, பக்தி என்பது தனிநபர் சார்ந்த விஷயம். மதம் என்பது வேறு.

  ஏவிஎம் இராஜன்கதை கொஞ்சம் வித்தியாசமானது. நானும் ஒரு பெண்ணில் லேசாக ஆரம்பித்து, சித்ராங்கி படத்தில் சேர்ந்து நடித்தபோது புஷ்பலதாவுடன் காதல் உண்டானது. கின்னசில் இடம் பெற வேண்டிய செய்தி,ஆனால் இடம் பெறாமல் போனது இந்தக் காதலைப் பற்றித் தான்! கிசு கிசுவாகத் தொடர்ந்து எழுதி சினிமா நடிகர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைத் தெரிந்து கொள்வதே தலையாய பணியாக குமுதம் வார இதழ் ஆரம்பித்து வைத்தது. (இந்துநேசன் மாதிரிப் பத்திரிகைகளில் வந்ததெல்லாம் வேறு!)

  புதுக்கோட்டை ராஜன் ஹிந்து என்பதும் புஷ்பலதா கிறித்தவர் என்பதும் மார்க்கெட் இருந்த வரை அவர்களுக்கே நினைவு வரவில்லை.

  மார்கெட் போன பிறகு,மகாலட்சுமி என்ற மகளை சினிமாவில் நடிக்க வைப்பதா இல்லையா என்ற பிரச்சினையில் தம்பதிகள் கருத்து வேறுபாடு ஆரம்பித்தது!

  மகமாயி பக்தராக இருந்த ஏவிஎம் இராஜன் ஏசு அடிமையாகிப் போனது தம்பதிகளுள் யார் ஆட்சி என்பதைக் காட்டியதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

  இதே மாதிரி நக்மா கூடக் கிறித்தவப் பிரசாரகரானது ஒன்றும் நம்பிக்கையோ, பக்தியோ, மதப் பிடிமானமோ இல்லை!

  எல்லாம் காசு செய்கிற வேலை! கிறித்தவம் அந்த வகையில் வலிமையாகவே இருக்கிறது!

  காசைக் கொடுத்து இந்த மாதிரிக் கவர்ச்சி ஐட்டங்களை வைத்துத் தான் கிறித்தவம் இங்கே கூட்டம் சேர்க்க முடிகிறது என்று கூட வைத்துக் கொள்ளலாம்!

 5. saintthomasfables சொல்கிறார்:

  manasu
  வலம்புரி ஜான் சொன்னதாய் நினைவு, மதம் மாறுகிறவர்களுக்கு தங்களின் மதம் தாங்கள் மாறுகின்ற மதம் இரண்டை பற்றியும் சரியாய் தெரிந்திருக்கவில்லை என்று.

  துயர் இல்லாமல் யார் இருக்கிறார்?? மதம் மாறினால் எல்லாம் சரியாகிவிடுமா?? அது உண்மையென்றால் உலகில் ஒரு மதம் தான் இருக்கும்.

  இவர்கள் எல்லாம் நிலையற்ற மனதுடையவர்கள்…

  செட்டியார்களில் விசாலிக்கு மட்டும் தான் துயர் இருக்கிறாதா?

 6. saintthomasfables சொல்கிறார்:

  பின்னூட்டம் பெரியசாமி..
  பிரபலமானவர்கள் மதம் மாறுவதை விளம்பரப் படுத்தி மேலும் ஆள் சேர்க்கும் உத்திதான் இது. மற்றபடி நாத்திகர்களாக இருக்கும் அனைவரும் அவரவர் மதங்களில் இருந்து வெளியேறியவர்கள்தான். மந்தையிலிருந்து மனிதனாக, நாத்திகனாக மாறியவர்கள், மாறிவருபவர்கள் விகிதத்தைப் பார்க்கும் போது இவையெல்லாம் கணக்கில் வராத அளவிற்கு குறைவானதுதான். ஒரு மந்தையிலிருந்து மற்றொரு மந்தைக்கோ, ஒரு பட்டியிலிருந்து மற்றதற்கோ, ஒரு கிடையிலிருந்து அடுத்ததற்கோ போவதில் எந்த லாபமும் இல்லை. அங்கிருந்து கசாப்புக் கடைக்கு போகாதவரை நட்டமும் இல்லை

 7. saintthomasfables சொல்கிறார்:

  MR.BOO
  உங்களது பதிவைப் படித்ததும் இந்த பழைய மலையாளத் திரைப் பாடல் நினைவு வருகின்றது

  Movie: Achanum Baappayum
  Lyrics: Vayalar
  Music: Devarajan
  Singer: Yesudas

  (தமிழில்)

  மனிதன் மதங்களை சிருஷ்டித்தான்
  மதங்கள் தெய்வங்களை சிருஷ்டித்தன

  மனிதனும் தெய்வங்களும் மதங்களும் கூடி மண்ணைப் பங்கு வைத்தன, மனதுகளைப் பங்கு வைத்தன

  ஹிந்துவானோம், முஸ்லிமானோம், கிறிஸ்துவரானோம்.

  அடையாளங்கள் தொலைந்து அறியாத மனிதரானோம்.

  இறுதியில் இந்தியாவைப் பைத்தியக்காரர்களின் ஆலயமாக மாற்றினோம்

  ஆயிரமாயிரம் அபல இருதயங்களை அவைகளின் பின்னால் அறியாதே அலைய வைத்தோம்

  தெய்வம் தெருவில் மரிக்கின்றது.
  சைத்தான் கை கொட்டிச் சிரிக்கின்றது

  **********

  சத்யம் எங்கே?

  சவுந்தர்யம் எங்கே?

  சுதந்திரம் எங்கே ?

  நமது ரத்த பந்தங்கள் எங்கே?

  நித்ய சிநேகம் எங்கே?

  ஆயிரம் யுகங்களில் ஒரு முறை வரும்

  அவதாரங்கள் எங்கே?

  மனிதன் தெருவில் மரிக்கின்றான்.

  மதங்கள் சிரிக்கின்றன…

  மனிதன் மதங்களை சிருஷ்டித்தான்
  மதங்கள் தெய்வங்களை சிருஷ்டித்தன….

 8. saintthomasfables சொல்கிறார்:

  மேற்படி தலைப்பில் நண்பர் கோவி.கண்ணன்
  அவர்களின் வலையில் – மதமாற்றத்தை
  விமரிசித்து ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

  அதற்கான மறுமொழியில் நான் எழுதி
  இருந்ததை இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்
  என்று தோன்றியது. எனவே கீழே
  கொடுத்திருக்கிறேன் –

  எதற்கு இத்தனை மதங்கள் ?
  ஏன் இத்தனை கடவுள்கள் ?

  மேலோட்டமாகப் பார்த்தாலோ, குறை கூறும்
  விதத்தில் பார்த்தாலோ இந்த விஷயம்
  அபத்தமாகத் தான் தெரியும்.

  கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று
  ஏற்கெனவே சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு
  இத்தனை மதங்களும் இவ்வளவு கடவுள்களும்
  இருப்பது மிகவும் அவநம்பிக்கையூட்டும்
  விதமாகவே இருக்கும்.

  ஆனால் உண்மையை அறிய வேண்டும்
  என்கிற எண்ணத்தோடு முயற்சி
  செய்பவர்களுக்கு இவற்றின் பின்னால் இருக்கும்
  நியாயம் புரியவே செய்யும்.

  உலகில் ஒவ்வொரு மதம் உருவாகவும்
  அதன் பின்னால் சில காரணங்களும்,
  அர்த்தங்களும், நியாயங்களும் இருந்தன !

  அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு !

  மொழிகள் எத்தனை இருந்தாலும் –
  அவை அனைத்தின் நோக்கமும், தேவையும்
  கருத்துப் பரிமாற்றமே அல்லவா ?

  நதிகள் எத்தனை ஓடினாலும் அவை
  அனைத்தும் இறுதியில் கடலையே
  சென்று சேருவது போல், மதங்கள்
  எத்தனை இருந்தாலும், அவை அனைத்தும்
  இறைவன் என்னும் ஒரு சக்தியையே
  நோக்கிச் செல்கின்றன.

  எனவே யார் எந்த மதத்தைப்
  பின் பற்றினாலும் தவறேதும் இல்லை !
  எல்லா மதமும் சம்மதமே !
  எல்லா தெய்வங்களும் ஒன்றே !!
  இறைவன் ஒருவனே !!!

  இருந்தாலும் – ஒருவர் ஒரு மதத்தை விட்டு
  இன்னுமொரு
  மதத்திற்கு மாறும்போது மட்டும்
  நம்மால் எளிதில்
  ஜீரணிக்க முடிவதில்லை – அல்லவா ?

  இது ஏன் ?

  என் கண்ணிற்கு மத மாற்றத்திற்கான காரணங்கள்
  இரண்டே இரண்டு தான் தெரிகின்றன.

  ஒன்று – அறியாமை – அல்லது
  இரண்டு – மதம் மாறுவதால் கிடைக்கும்
  அனுகூலங்கள்.

  இத்தகையோர்களை கண்டு கொள்ளாமல்,
  இவற்றைப் நாம் பொருட்படுத்தாமல்,
  அலட்சியப்படுத்துவதே – இதற்குண்டான வைத்தியம்
  என்பது என் எண்ணம்.

  என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ?

  – ஜி.கே.-

 9. Raja சொல்கிறார்:

  Power of Money is too great for Kannadasan family also

 10. R Yovan Gandhi சொல்கிறார்:

  அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கண்ணதாசன் அவர்கள்தான் தனது வாழ்வின் இறுதி நாளில் இயேசு காவியம் என்ற காவியத்தையும் படைத்துள்ளார். ஒருவரின் பிறப்பை மதம் நிரணியிக்கக் கூடாது. மதம் மாற்றம் அவர் உள்ளத்தில் தானகவே ஏற்பட்டதேயாயின் அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது. வற்புறுதியோ பிறருக்காக மனம் மாறும் போது தான் இரண்டு மதத்திற்கும் தகுதியற்றவராகிறார் என்ற கருத்ததைதான் சுவாமி விவேகானந்தர் கூறுயிருக்கிறார், விரும்பி தாமே ஏற்றுக் கொண்ட ஜெனிபர் என்கிற விசாலி கண்ணதாசனை வாழ்த்துகிறேன்.
  அன்புடன்
  இரா, யோவான் காந்தி

 11. Chegu Vera சொல்கிறார்:

  அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கண்ணதாசன் அவர்கள்தான் தனது வாழ்வின் இறுதி நாளில் இயேசு காவியம் என்ற காவியத்தையும் படைத்துள்ளார். ஒருவரின் பிறப்பை மதம் நிரணியிக்கக் கூடாது. மதம் மாற்றம் அவர் உள்ளத்தில் தானகவே ஏற்பட்டதேயாயின் அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது. வற்புறுதியோ பிறருக்காக மனம் மாறும் போது தான் இரண்டு மதத்திற்கும் தகுதியற்றவராகிறார் என்ற கருத்ததைதான் சுவாமி விவேகானந்தர் கூறுயிருக்கிறார், விரும்பி தாமே ஏற்றுக் கொண்ட ஜெனிபர் என்கிற விசாலி கண்ணதாசனை வாழ்த்துகிறேன்.
  good good good

 12. sriya சொல்கிறார்:

  kannadasan is an legent but visali ??????????????

 13. Krishna Krishnan சொல்கிறார்:

  பிற கடவுளை வணங்காமல் என்னை மட்டுமே வணங்கினால் நீ அடுத்தவனைக் கொன்று போட்டு அவன் பெண்டாட்டிய அபகரித்தாலும் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் .
  இப்படிக்கு,
  சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.

  விசயம் என்னவென்றால் தாவீது என்னப்பட்ட ஒரு ராஜா இருந்தார் ,அவர் ஒரு முறை காமம் முத்திப்போய் தன்னுடைய போர் வீரனின் மனைவியை வரவழைத்து உடலுறவு கொண்டு போடுவார் , அதனால் அவள் கர்ப்பம் தரித்து விடுவாள் ,அதை அவள் ராஜாவிற்கு அறிவிப்பாள். அடுத்தவன் பெண்டாட்டியோடு உடலுறவு கொண்டதை மக்கள் கேள்விப்பட்டால் மானம் போய் விடும், பதவியும் பறி போய் விடும் என்று பயந்த ராஜா இந்தப்பிள்ளைக்கு அப்பனாக அவளின் கணவனே கையெளுத்துப்போட வைக்க வேண்டும், அதற்கு அவனை உடனடியாக போர்க்களத்தில் இருந்து வரவளைக்க வேண்டுமென்று திட்டம் போட்டு அவனை வரவளைத்து நீ உனது வீட்டுக்குப் போ என்கிறார் ,ஆனால் அந்த வஞ்சகம் அறியாத போர்வீரன் நாடு இருக்கும் நிலமையில் நான் குடும்பத்தோடு சந்தோசமாய் இருக்க முடியாது நான் போருக்குப் போக வேண்டும் என்று சொல்லி போருக்குப் போய் விடுவான் .இதில் இருந்து தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா என்று யோசித்த ரஜாவிற்கு தோன்றிய யோசனை, அவனை கொலை செய்து போட்டு பெண்டாட்டியை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்பதே. அதன் படி போர்க்களத்தில் அவனை தனிய நிற்பாட்டி எதிரிகளின் தாக்குதலில் அவன் இறந்து போனபின் அவனின் பெண்டாட்டியை தனக்கு சொந்தமாக்கிக் கொள்வான். இவ்வளவும் நடக்கு மட்டும் நித்திரையில் இருந்த கர்த்தர் விழித்தெளுந்து தாவீது ராஜாவிற்கு அறிவிப்பார், நீ செய்த அக்கிர்மத்தை நான் கண்டுவிட்டேன் ஆனாலும் நீ என்னை அல்லாமல் வேறு தேவர்களை வணங்காமல் இருந்த படியால் உன்னை மன்னித்து விட்டேன் ,ஆனாலும் இந்த செயலுக்காக யாரையாவது தண்டிக்க வேண்டும் அதனால் உன்னால் அவளுக்கு பிறக்கப் போகும் குளந்தையை கொன்று போடுகிறேன் அப்போது எல்லாம் சரியாகி விடும் என்றார், அதன்படி குழந்தை பிறந்ததும் அதைக் கர்த்தர் கொண்டு போடுகிறார்.

  இதில் ஒன்றுகூட எனது கர்ப்பனை அல்ல எல்லாமே வைபிளில் இடம் பெற்ற சம்பவங்களே,இதோடு வைபிள் வசனங்களையும் தருகிறேன் பாருங்கள்.

  II சாமுவேல்
  11 அதிகாரம்

  1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

  2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.

  3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.

  4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.

  5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.

  6. அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.

  7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.

  8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

  9. ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.

  10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

  11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.

  12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.

  13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

  14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

  15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

  16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

  17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

  18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,

  19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,

  20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?

  21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.

  22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,

  23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.

  24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.

  25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய், இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.

  26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.

  27. துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

  II சாமுவேல்
  12 அதிகாரம்

  1. கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

  2. ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

  3. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.

  4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.

  5. அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

  6. அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

  7. அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

  8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

  9. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

  10. இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

  11. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

  12. நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.

  13. அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.

  14. ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.

  15. அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

  மேற்படி காரியத்தை இப்போது யாராவது செய்வார்களாயின் ,சிறுவர்களைத் துன்புறுத்துதலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மூளைச் சலவை செய்யப்பட்ட கர்த்தரின் பிள்ளைகள் சிந்திப்பீர்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s