500ரூ நோட்டில் கிறிஸ்தவ மதப் பிரசாரம்

Posted: ஜூலை 10, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.
கிருத்துவ-மதப்பிரச்சாரம்-ரூ.500ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு:நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்:ரூபாய் நோட்டில், மத பிரசாரம் செய்வதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.கடலோர பகுதிகளில், மதமாற்றும் விதமாக, 500 ரூபாய் நோட்டுகளில் பிரசாரங்களை அச்சிட்டு வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தது குறித்து, “தினமலர்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. ரூபாய் வினியோகம் செய்து மதமாற்றம் செய்வதற்கு பாதிரியார்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட பெந்தகோஸ்தே ஊழியர்கள் செயலர் ஜான்சான் கூறியதாவது:ரூபாய் நோட்டில் அச்சிடுவது, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. அதிலும், மதமாற்றத்துக்கான வாசகங்களை அச்சிட்டு வினியோகிப்பது கண்டிக்கதக்கது. இயேசுவின் உண்மையான ஊழியன் யாரும், இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை அரசு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயலை பெந்தகோஸ்தே ஊழியர்கள் ஏற்கமாட்டோம்.இவ்வாறு ஜான்சான் கூறினார்.இதே போல் கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும், ரூபாய் நோட்டு பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதமாற்றத்துக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது குறித்து, கடலோர பகுதியில் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

பின்னூட்டங்கள்
  1. ஜெகதீஸ்வரன் சொல்லுகின்றார்:

    பிள்ளையை கிள்ளிவிட்டு விட்டு தொட்டிலும் ஆட்டுகிறார்கள்!.

    நல்ல வேடிக்கை@!

    – சகோதரன் ஜெகதீஸ்வரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s